‘பலூன்’ படத்தில் நடிக்கும் ஓவியா

சினிஷ் இயக்கத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில் ஜெய், அஞ்சலி மற்றும் பலர் நடிக்கும் படத்தில் ஓவியா நடிக்கிறார்.

படத்தில் கதாநாயகியாக நடிக்கவில்லை என்றாலும் சில காட்சிகள் மற்றும் ஒரு பாடலில் ஓவியா நடிப்பதால் ரசிகர்கள் ஏமாற மாட்டார்கள்.

இந்தப் படத்திற்காக ஏற்கெனவே, ஓவியாவின் புகழ் பெற்ற டயலாக்கான ‘நீங்க ஷட்-அப் பண்ணுங்க’ என்ற பாடலை வெளியிட்டுள்ளார்கள்.

ஓவியா, பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெளியேறிய பிறகு முதன் முதலில் நடிக்க வந்துள்ள தமிழ்ப் படம் இது.

மேலும், பல புதிய படங்களில் அவர் நடிப்பதற்கான பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம். இதனிடையே, ஓவியா நடித்து மலையாளத்தில் வெளிவந்துள்ள சில படங்களையும் தமிழில் டப்பிங் செய்து வெளியிட உள்ளார்கள்.

தமிழின் நம்பர் 1 நடிகையாக இருக்கும் நயன்தாராவையும் மிஞ்சிய புகழைப் பெற்றுள்ள ஓவியா முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்தால் அடுத்த நம்பர் 1 நடிகை அவர்தான்.

Read Previous

சிரஞ்சீவி பட இசைக்கோர்ப்பில் ஏ.ஆர்.ரகுமான்

Read Next

விஜய் ஆண்டனி ஜோடியாக அஞ்சலி