சிரஞ்சீவியின் மகன் ராம் சரண் தயாரிக்க, சுரேந்தர் ரெட்டி இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் சிரஞ்சீவி, அமிதாப்பச்சன், சுதீப், ஜெகபதி பாபு, விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் பலர் நடிக்கும் படம் ‘சை ரா நரசிம்ம ரெட்டி’.
பிரிட்டிஷ் ஆதிக்கத்தை எதிர்த்து ஆந்திராவின் கர்னூல் மாவட்டத்தைச் சேர்ந்த உய்யலவாடா நரசிம்ம ரெட்டி 1840களில் போராடினார். அவருடைய வாழ்க்கை வரலாற்றைத்தான் திரைப்படமாக எடுக்கிறார்கள்.
சுமார் 200 கோடி ரூபாய் செலவில் தயாராக உள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் ஆரம்பமாக உள்ளது. இதற்காக இயக்குனர் சுரேந்தர் ரெட்டியும், ரகுமானும் இசைக் கோர்ப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சிரஞ்சீவி நடிக்கும் ஒரு படத்திற்கு எ.ஆர்.ரகுமான் இசையமைப்பது இதுவே முதல் முறை. அவர் இசையமைப்பாளர்கள் ராஜ் கோட்டி, இளையராஜா ஆகியோரிடம் பணியாற்றிய போது சிரஞ்சீவி படங்களுக்கு இசையமைத்திருக்கிறார்.
‘பாகுபலி 2’ படத்திற்குப் பிறகு தெலுங்குத் திரையுலகில் பலரின் எதிர்பார்ப்பைத் தூண்டியுள்ள படம் ‘சை ரா நரசிம்மரெட்டி’.