இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி தற்போது ‘அண்ணாதுரை, காளி’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
‘அண்ணாதுரை’ படத்தை அறிமுக இயக்குனர் சீனிவாசன் இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் விஜய் ஆண்டனி ஜோடியாக டயானா சம்பிகா நடித்து வருகிறார்.
‘காளி’ படத்தை ‘வணக்கம் சென்னை’ படத்தை இயக்கிய கிருத்திகா உதயநிதி இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் மொத்தம் நான்கு நாயகிகள் நடிக்க உள்ளார்கள். ஏற்கெனவே, சுனைனா, அம்ரிதா நடித்து வருகிறார்கள். தற்போது மேலும் ஷில்பா மஞ்சுநாத், அஞ்சலி ஆகியோர் நடிக்க உள்ளார்கள்.
சஸ்பெஸ் த்ரில்லர் படமான இதில் நடிக்கும் நான்கு நாயகிகளுக்குமே சமமான முக்கியத்துவம் உள்ளது என்கிறார் இயக்குனர் கிருத்திகா.
தமிழில் ‘பேரன்பு, பலூன், காண்பது பொய்’ ஆகிய படங்களை அடுத்து அஞ்சலி நடிக்கும் படம் இது.
அஞ்சலி சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு விரைவில் ஆரம்பமாக உள்ளது.