‘காலா’வில் நடித்து கருப்பான நடிகை !!

பா.ரஞ்சித் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் ரஜினிகாந்த், ஹுமா குரேஷி மற்றும் பலர் நடிக்கும் ‘காலா’ படத்தின் படப்பிடிப்பு பெப்ஸி ஸ்டிரைக்கிற்குப் பிறகு இன்று முதல் மீண்டும் ஆரம்பமானது.

சென்னையில் தனியார் ஸ்டுடியோ ஒன்றில் அமைக்கப்பட்ட அரங்கில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்தப் படப்பிடிப்பில் படத்தின் நாயகியான ஹுமா குரேஷியும் கலந்து கொண்டார்.

சென்னையில் அடிக்கும் வெயிலில் அரை நாளில் கருத்துவிட்டேன் என ஹுமா புகைப்படம் ஒன்றையும் பகிர்ந்துள்ளார். இருந்தாலும் ‘படப்பிடிப்பு வாழ்க்கை, வேலை நேரம், நேசம்’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

‘காலா’ படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு மாத காலம் தொடர்ந்து நடைபெற்று அத்துடன் படப்பிடிப்பு முடிவடைய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Read Previous

அமெரிக்காவில் 600+ தியேட்டர்களில் ‘ஸ்பைடர்’ ரிலீஸ்

Read Next

திரையுலகினரின் பாராட்டில் ‘துப்பறிவாளன்’