திரையுலகினரின் பாராட்டில் ‘துப்பறிவாளன்’

விஷால் பிலிம் ஃபேக்டரி தயாரிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் விஷால், அனு இம்மானுவேல், பிரசன்னா, ஆன்ட்ரியா, சிம்ரன் மற்றும் பலர் நடித்துள்ள ‘துப்பறிவாளன்’ படம் நாளை வெளியாக உள்ளது.

இப்படத்தின் சிறப்பு காட்சி நேற்று திரையுலகத்தினருக்கு திரையிடப்பட்டது. படத்தைப் பார்த்த பலரும் இயக்குனர் மிஷ்கினையும், விஷாலையும் பாராட்டி வருகிறார்கள்.

மிகவும் விறுவிறுப்பான ஒரு த்ரில்லர் படமாக இருக்கிறது என்றும், ஆரம்பம் முதல் கடைசி வரை கொஞ்சம் கூட தொய்வில்லாமல் காட்சிகள் நகர்கிறது என்றும் பாராட்டியுள்ளார்கள்.

மிஷ்கின், விஷால் இருவருமே பெரிய வெற்றியை எதிர்பார்த்துள்ள நிலையில் இந்தப் படம் அவர்களிருவருக்கும் திருப்புமுனையான வெற்றியை நிச்சயம் கொடுக்கும் என்றும் தெரிவிக்கிறார்கள்.

 

Read Previous

‘காலா’வில் நடித்து கருப்பான நடிகை !!

Read Next

‘ஸ்பைடர், ஸ்கெட்ச், பார்ட்டி, ஜுங்கா‘ வரிசையில் ‘சூப்பர் டீலக்ஸ்‘