‘ஸ்பைடர், ஸ்கெட்ச், பார்ட்டி, ஜுங்கா‘ வரிசையில் ‘சூப்பர் டீலக்ஸ்‘

ஜிஎஸ்டி வரி விதிப்பு எப்போது கொண்டு வந்தார்களோ அதற்காகவே காத்துக் கொண்டிருந்தது போல இருந்தார்கள் சில தமிழ் இயக்குனர்கள்.

தமிழில் தலைப்பு வைத்தால்தான் படத்திற்கு தமிழக அரசின் வரி விலக்கு கிடைக்கும் என்ற கட்டுப்பாடு இருந்தது வந்தது. அதனால் பலரும் ஏற்கெனவே வெளிவந்த படங்களின் பெயர்களைக் கூட வைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்கள்.

மேடை கிடைத்தால் தமிழ்ப் பற்று, தமிழ்க் கலாச்சாராம் என முழங்குபவர்கள் சினிமாவில் எதைப் பற்றியும் கவலைப்படுவது கிடையாது.

ஏற்கெனவே, “ஸ்பைடர், ஸ்கெட்ச், பார்ட்டி, ஜுங்கா, ஹவுஸ் ஓனர்’ என தமிழல்லாத பெயர்களில் திரைப்படங்கள் உருவாக ஆரம்பித்த நிலையில் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்திற்கு ‘சூப்பர் டீலக்ஸ்’ என்ற பெயரை நேற்று அறிவித்துள்ளார்கள்.

இன்னும் எத்தனை எத்தனை தமிழ்க் கொலைகளை நாம் பார்க்க வேண்டியிருக்குமோ…எதற்கும் தயாராக இருங்கள் தமிழ் ரசிகர்களே…

Read Previous

திரையுலகினரின் பாராட்டில் ‘துப்பறிவாளன்’

Read Next

பெரிய படங்களை வாங்கித் தள்ளும் சன் டிவி

Most Popular