அமெரிக்காவில் 600+ தியேட்டர்களில் ‘ஸ்பைடர்’ ரிலீஸ்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில் மகேஷ் பாபு, ரகுல் ப்ரீத் சிங், எஸ்.ஜே.சூர்யா, பரத், ஆர்.ஜே. பாலாஜி மற்றும் பலர் நடித்துள்ள ‘ஸ்பைடர்’ படம் இந்த மாதம் 27ம் தேதி உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.

தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 300க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் இப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார்கள். ஆந்திரா, தெலுங்கானாவில் சுமார் 800 தியேட்டர்கள் வரை வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவில் மட்டும் தமிழ், தெலுங்கு இரு மொழிகளையும் சேர்த்து சுமார் 600க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் இப்படத்தை வெளியிட உள்ளதாக அமெரிக்க வினியோக நிறுவனம் அறிவித்துள்ளது.

தெலுங்கில் 250 இடங்கிளிலும், தமிழில் 160 இடங்களிலும் வெளியாக உள்ளது. ஒரு இந்தியத் திரைப்படத்தின் இரண்டாவது பிரம்மாண்ட வெளியீடான ‘ஸ்பைடர்’ வெளியீட்டின் தியேட்டர்கள் பற்றிய விவரம் செப்டம்பர் 15ம் தேதி முதல் இணையதளங்களில் வெளியாகிறது. அன்றைய தினமே முன்பதிவும் ஆரம்பமாகிறது.

செப்டம்பர் 26ம் தேதி நண்பகல் 12 மணிக்கே படத்தின் பிரிமியர் காட்சிகள் நடக்க உள்ளன.

மகேஷ் பாபுவின் மிகப் பெரும் வெளியீடாக ‘ஸ்பைடர்’ படம் அமைய உள்ளது.

Read Previous

விஜய்யின் ‘தெறி’ படத்தை வாங்கிய சன் டிவி

Read Next

‘காலா’வில் நடித்து கருப்பான நடிகை !!