ஹிந்தியில் கங்கனா ரனவத் நடித்து வெளிவந்து மிகப் பெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘குயின்’.
இப்படத்தின் தமிழ் ரீமேக் தொடர்பாக பலவிதமான தகவல்கள் வெளிவந்த சூழ்நிலையில் நேற்று தமிழ் ரீமேக்கின் அதிகாரப்பூர்வ அறிவிப்பும், படத்தின் துவக்க விழாவும் நடைபெற்றது.
படத்திற்கு ‘பாரிஸ் பாரிஸ்’ எனப் பெயர் வைத்துள்ளனர். ரமேஷ் அரவிந்த் இயக்க, அமித் திரிவேதி இசையமைக்கிறார்.
‘குயின்’ படத்தில் கங்கனா ரனவத் நடித்த கதாபாத்திரத்தில் தமிழில் காஜல் அகர்வால் நடிக்கிறார். படத்தின் நாயகனாக சஷி வருண் நாயகனாக நடிக்கிறார்.
மீடியன்ட் மனு குமாரன் மற்றும் லைகர் மனோஜ் கேசவன் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கிறார்கள்.
கன்னடத்தில் ‘குயின்’ ரீமேக்கை ‘பட்டர்பிளை’ என்ற பெயரில் இயக்கி வரும், ரமேஷ் அரவிந்த் தமிழ் ரீமேக்கையும் இயக்க உள்ளார்
தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் ‘குயின்’ படம் ரீமேக்காக உள்ளது.
தமிழ் ரீமேக்கான ‘பாரிஸ் பாரிஸ்’ படத்திற்கு தமிழச்சி தங்கபாண்டியன் வசனம், பாடல்களை எழுதுகிறார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் தயாராகும் ‘குயின்’ ரீமேக்கை ஒரே நாளில் வெளியிட உள்ளார்கள்.
விரைவில் ‘பாரிஸ் பாரிஸ்’ படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகிறது.