வெளிநாடுகளில் 800 தியேட்டர்களில் ‘மெர்சல்’ ரிலீஸ்

தேனாண்டாள்  ஸ்டுடியோஸ் தயாரிப்பில் அட்லீ இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் விஜய், காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன், சத்யராஜ், எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு, கோவை சரளா மற்றும் பலர் நடித்துள்ள ‘மெர்சல்’ படம் அடுத்த வாரம் அக்டோபர் 18ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.

ஏற்கெனவே 3200க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் உலகம் முழுவதும் இப்படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. வெளிநாடுகளில் மட்டும் சுமார் 800 தியேட்டர்கள் வரை இப்படம் வெளியாவதாக வெளிநாட்டு உரிமையை வாங்கியுள்ள ஏபிஐ பிலிம்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. ஹோம் ஸ்கிரீன் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்துடன் இணைந்து ஏபிஐ பிலிம்ஸ் இப்படத்தை வெளியிடுகிறது.

அதன்படி, அதிகபட்சமாக அமெரிக்காவில் தமிழில் 150 தியேட்டர்களிலும்,  தெலுங்கில் 70 தியேட்டர்களிலும், அடுத்து மலேசியாவில் 120 தியேட்டர்களிலும் மற்ற நாடுகளிலும் சேர்த்து சுமார் 800 தியேட்டர் வரை ‘மெர்சல்’ வெளியாக உள்ளது. வெளியீட்டிற்கு இன்னும் 5 நாட்கள் இருப்பதால் இந்த எண்ணிக்கை மேலும் அதிகமாகலாம்.

அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஸ்விட்சர்லாந்து, ஸ்கேன்டிநாவியா, ஜெர்மனி, நெதர்லாந்து, பெல்ஜியம், அரபு நாடுகள், சிங்கப்பூர், மலேசியா, ஸ்ரீலங்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஹாங்காங், இந்தோனேசியா, பர்மா, பிலிப்பைன்ஸ், கிழக்கு ஆப்ரிக்கா, தென் ஆப்ரிக்கா, மெக்சிகோ ஆகிய நாடுகளில் ‘மெர்சல்’ படம் வெளியாகிறது.

Read Previous

தொழில்நுட்பத்தின் மறுபக்கத்தைக் காட்டும் ‘எக்ஸ் வீடியோஸ்’

Read Next

சக்க போடு போடு ராஜா – டிரைலர்

Most Popular