தரமான படங்களில் நடிக்க வேண்டும் – சந்தீப் கிஷன்

சுசீந்திரன் இயக்கத்தில் சந்தீப் கிஷன், விக்ராந்த், மெஹ்ரீன் மற்றும் பலர் நடித்துள்ள ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ படம் வரும் 10ம் தேதியன்று வெளியாக உள்ளது.

இப்படத்தில் நாயகனாக நடித்துள்ள சந்தீப் கிஷன் தரமான படங்களில்  நடிக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை எனக் கூறுகிறார்.

“மாநகரம்’ வெளியான பின் படத்தைப் பார்த்தவர்கள் அனைவரும் என்னை பாராட்டினார்கள். தமிழில் நிச்சயம் தரமான படங்களில் மட்டும் நடிக்க வேண்டும் என்பது தான் என்னுடைய ஆசை.

ஒவ்வொரு நாயகனுக்கும் ஒரு அடையாளம் இருக்கும். அதைப் போல் என்னுடைய அடையாளமாக தரமான படங்களில் நடிக்கும் நாயகன் நான் என எனக்குப் பெயர் வர வேண்டும் என விரும்புகிறேன்.

இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்று நான் ஆரம்ப காலகட்டத்தில் இருந்தே முயற்சித்து வருகிறேன். ‘வெண்ணிலா கபடி குழு’ படத்தில் நடிக்க முயற்சித்தேன். ஆனால் சில காரணங்களால் எனக்கு அந்த வாய்ப்பு அமையவில்லை. இப்போது ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ திரைப்படத்தின் மூலம் நாங்கள் இணைந்துள்ளது மகிழ்ச்சியாக உள்ளது.

‘நெஞ்சில் துணிவிருந்தால்’ திரைப்படத்தில் நான் குமார் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். குமார் என்ற கதாபாத்திரம் தான் இந்த படத்தில் ஹீரோ. விக்ராந்த் ‘பாண்டிய நாடு’ படத்தை விட இந்தப் படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருக்கும் இப்படம் கண்டிப்பாக நல்ல பெயர் வாங்கி தரும்.

நானும் மெஹ்ரீனும் இனைந்து நடித்துள்ள காதல் காட்சிகள் நன்றாக வந்துள்ளது. ‘மாநகரம்’ திரைப்படத்தில் இருந்து இப்படத்தில் நான் நடித்துள்ள கதாபாத்திரம் முற்றிலும் மாறுபட்டு இருக்கும். படம் சிறப்பாக வந்துள்ளது. என்னுடைய கதாபாத்திரமும் நிச்சயம் மக்களிடம் எனக்கு மீண்டும் ஒரு நல்ல பெயரை வாங்கித் தரும்.

இந்தப் படத்திலும் இயக்குநர் சுசீந்திரனின் பாணியில் சமூகத்துக்கு ஒரு நல்ல கருத்து ஒன்றை சொல்லியுள்ளோம் அது கண்டிப்பாக கவனிக்கப்படும் ஒன்றாக இருக்கும்,” என்றார் சந்தீப் கிஷன்.

Read Previous

சொல்லிவிடவா – டீசர்

Read Next

‘நெஞ்சில் துணிவிருந்தால்’, ஒரு வெற்றிப் படைப்பு – வைரமுத்து

Most Popular