தெலுங்கு மெகா ஸ்டார் சீரஞ்சீவியின் தம்பியான, தெலுங்கு நடிகர் நாகேந்திர பாபுவின் மகள் நிஹாரிகா கோனிடேலா ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ படம் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாக உள்ளார்.
விஜய் சேதுபதி, கவுதம் கார்த்திக் கதாநாயகர்களாக நடிக்கும் இப்படத்தை ஆறுமுக குமார் இயக்குகிறார்.
தமிழில் அறிமுகமாவது பற்றி நிஹாரிகா கூறுகையில்,
”தமிழில் எனது முதல் படமே இவ்வளவு பெரிய படமாக அமைந்ததில் பெரும் மகிழ்ச்சி. சிறந்த அணி, சிறப்பான கதை எனக்குக் கிடைத்துள்ளது . தமிழ் மொழி மீது என்றுமே பற்றுள்ளவள் நான். எனது குடும்பத்தில் எல்லோருமே நன்றாக தமிழ் பேசுவார்கள்.
விஜய் சேதுபதி மற்றும் கவுதம் கார்த்திக் போன்ற எளிமையான நடிகர்களைப் பார்ப்பது அரிது. அவர்களுடன் பணிபுரிந்தது ஒரு அருமையான அனுபவம். இப்படத்தில் எனது கதாபாத்திரம் வழக்கமான கதாநாயகி கதாபாத்திரம் அல்ல. எனது கதாபாத்திரம் இரண்டு பெயர்களில் வரும். ஏன் இரண்டு பெயர்கள் என்பதை படம் பார்க்கும் பொழுது நீங்களே அறிவீர்கள்.
எனது குடும்பத்தார் எனக்கு அளிக்கும் ஆதரவும், ஊக்கமும் அளவற்றது. இது போன்ற ஒரு குடும்பம் அமைந்துள்ளதால், நான் பெரிய அதிர்ஷ்டசாலி. ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் ‘ படத்தையும் எனது கதாபாத்திரத்தையும் தமிழ் சினிமா ரசிகர்கள் ரசித்துக் கொண்டாடுவார்கள் என நம்புகிறேன்,” என்றார்.
இப்படத்தை 7 சி என்டர்டெயின்மென்ட் மற்றும் அம்மே என்டர்டெயின்மென்ட் ஆகியவை இணைந்து தயாரிக்கின்றன.