நடிகர் நிதின் சத்யா முதல் முறையாகத் தயாரிக்கும் படத்திற்கு, ‘ஜருகண்டி’ எனப் பெயர் வைத்திருக்கிறார்கள்.
ஜெய் கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தை பிச்சுமணி இயக்குகிறார்.
படம் பற்றி தயாரிப்பாளரான நிதின் சத்யா கூறுகையில்,
“ஜருகண்டி’ பட இயக்குனர் பிச்சுமணியும் நானும் இக்கதைக்குப் பொருத்தமான தலைப்பாக மட்டும் இல்லாமல், மனதில் எளிதில் ஒட்டிக்கொள்ளும் தலைப்பாகவும் இருக்க வேண்டும் என்று நினைத்தோம். அவ்வாறே ‘ஜருகண்டி’ முடிவானது.
இது பிற மொழி வார்த்தையாக இருந்தாலும் நம் தமிழ்நாட்டிலும் இது பிரபலமான வார்த்தையாக இருந்து வருகிறது. நாங்கள் ஷூட்டிங்கை மிகவும் எதிர் நோக்கியுள்ளோம். ஏனென்றால் இக்கதை அவ்வளவு சுவாரசியமாகவும் அசத்தலாகவும் அமைந்துள்ளது.
ஜெய்யின் சினிமா வாழ்க்கையில் ‘ஜருகண்டி’ ஒரு முக்கிய படமாக இருக்கும். பலராலும் கவனிக்கப்படும் , எதிர் பார்க்கப்படும். ரெபா ஜோன் இப்படத்தின் கதாநாயகி. ரோபோ ஷங்கர், டேனி, ‘சிறுத்தை’ அமித் , இளவரசு , மைம் கோபி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர்.
போபோ சஷி இசையக்கும் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். K L பிரவீன் படத்தொகுப்பில், அர்வியின் ஒளிப்பதிவில், ரேமியன் கலை இயக்கத்தில், அஜய் ராஜின் நடன இயக்கத்தில் இப்படம் உருவாகவுள்ளது. இயக்குனர் பிச்சுமணி எவ்வளவு திறமையானவர் என்பதை இப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் அறிவார்கள்,” என்கிறார் நிதின் சத்யா.
இப்படத்தை நிதின் சத்யாவின் ‘ஷ்வேத் ‘ நிறுவனமும், பத்ரி கஸ்தூரியின் ‘ஷ்ரத்தா என்டர்டைன்மெண்ட்’ நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது.