ஸ்டுடியோ க்ரீன் கே.இ.ஞானவேல் ராஜா தயாரிப்பில் ஹரி இயக்கத்தில் சூர்யா, அனுஷ்கா, ஸ்ருதிஹாசன் மற்றும் பலர் நடித்துள்ள ‘சி 3’ படம் வரும் பிப்ரவரி 9ம் தேதி தமிழ், தெலுங்கில் வெளியாக உள்ளது.
ஹரி – சூர்யா கூட்டணியில் இதற்கு முன் வெளிவந்து ‘சிங்கம், சிங்கம் 2’ ஆகிய படங்கள் வசூல் ரீதியாக பெரிய வெற்றியைப் பெற்றது.
‘சிங்கம்’ வரிசையில் வெளிவரும் 3வது பாகமான ‘சி 3’ படம் 100 கோடி ரூபாய்க்கு மேல் வியாபாரம் ஆகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள்.
வசூல் ரீதியாகவும் இந்தப் படம் பெரிய வெற்றியைப் பெறும் என திரையுலகத்தில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
முந்தைய பாகங்களை விட இந்த மூன்றாவது பாகம் மிகவும் பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் இருக்கும் என படக்குவினர் தெரிவித்துள்ளார்கள்.
‘சி 3’ படம் மூலம் மீண்டும் ஒரு பெரிய வெற்றியை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார் சூர்யா.
ரசிகர்களுக்கு ஒரு ‘என்டர்மெயின்ட்’ படமாக இந்தப் படம் இருக்கும் என்பது உறுதி.