மீண்டும் இணையும் ‘ஐரா’ படக்குழு

சர்ஜுன் இயக்கத்தில் மீண்டும் நடிக்க முடிவு செய்திருக்கிறார் நயன்தாரா.

சர்ஜுன் இயக்கத்தில் நயன்தாரா  நடிப்பில் வெளியான படம் ‘ஐரா’. இந்தப் படம் திட்டமிட்ட வரவேற்பினை பெறவில்லை. இதனைத் தொடர்ந்து சில படங்களை இயக்கினார் சர்ஜுன். அவையும் போதிய வரவேற்பைப் பெறவில்லை. தற்போது மீண்டும் நயன்தாரா படம் இயக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

சர்ஜுன் – நயன்தாரா இணையும் படத்தினை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்தப் படத்தின் கதையினை முன்னணி விமர்சகர் பரத்வாஜ் ரங்கன் எழுதியிருக்கிறார். இதன் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் தான் தொடங்கவுள்ளனர்.

தற்போது நயன்தாரா ஒப்பந்தமாகியுள்ள படங்கள் அனைத்தையும் முடித்துவிட்டு தான் சர்ஜுன் படத்துக்கு தேதிகள் ஒதுக்கவுள்ளார் நயன்தாரா. அதற்குள் படத்தின் முதற்கட்ட பணிகளை முடித்துவிட படக்குழு திட்டமிட்டு இருக்கிறது.

Read Previous

தமிழ் சினிமா – இரண்டாம் பாகத் திரைப்படங்கள் – பட்டியல்

Read Next

எகிறிய பட்ஜெட்: சிக்கலில் ’டீசல்’

Most Popular