எகிறிய பட்ஜெட்: சிக்கலில் ’டீசல்’

திட்டமிட்டதை விட பல மடங்கு பட்ஜெட் அதிகமானதால், ‘டீசல்’ சிக்கலில் சிக்கியிருக்கிறது.

ஷண்முகம் முத்துசுவாமி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அதுல்யா ரவி, விஜய், சாய் குமார் உள்ளிட்ட பலர் நடிக்க தொடங்கப்பட்ட படம் ‘டீசல்’. தேர்டு ஐ மற்றும் எஸ் பி சினிமாஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்தப் படத்தினை தயாரித்து வருகிறது. 3 ஆண்டுகளாக இந்தப் படம் தயாரிப்பில் இருக்கிறது.

டீசல் வியாபாரத்தின் பின்னணியில் உள்ள அரசியலை வைத்து இந்தக் கதையினை உருவாக்கி இருக்கிறார் ஷண்முகம் முத்துசுவாமி. ‘டீசல்’ படம் தொடங்கப்பட்ட போது இருந்த பட்ஜெட்டை விட, இப்போது பலமடங்கு அதிகமாகி இருக்கிறது.

இதனால் ஓடிடி மற்றும் தொலைக்காட்சி உரிமைக்கு கோரும் விலையும் அதிகமாக இருக்கிறது. இதுவரை எந்தவொரு நிறுவனமும் வாங்க முன்வரவில்லை. இப்போது எப்படியாவது படத்தினை வெளியிட்டுவிடலாம் என்ற முனைப்பில் இறங்கியிருக்கிறது படக்குழு.

விரைவில் படத்தின் ப்ரோமோ பாடல் ஒன்றை படமாக்க திட்டமிட்டு இருக்கிறார்கள். இதனை வெளியிட்டு, விளம்பரப்படுத்தும் பணிகளைத் தொடங்க இருக்கிறார்கள்.

Read Previous

மீண்டும் இணையும் ‘ஐரா’ படக்குழு

Read Next

நானிக்கு நாயகியாகும் ஜான்வி கபூர்?

Most Popular