தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களாகவே நம்பர் 1 இடத்தில் இருப்பவர் நயன்தாரா. அவர் நடிக்கும் எந்த ஒரு பட விழாவிற்கும் வரவே மாட்டார்.
எவ்வளவு பெரிய தயாரிப்பு நிறுவனமாக இருந்தாலும், இயக்குனராக இருந்தாலும், ஹீரோவாக இருந்தாலும் கூட கலந்து கொள்ள மாட்டார்.
சமீபத்தில் தெலுங்கில் சிரஞ்சீவியுடன் நடித்த ‘சைரா’ பட விழாக்களிலும், ரஜினிகாந்த்துடன் நடித்துள்ள ‘தர்பார்’ பட விழாக்களிலும் கூட அவர் கலந்து கொள்ளவில்லை.
ஆனால், சமீபத்தில் ஜீ டிவி நடத்திய ஜீ சினிமா விருதுகள் தமிழ் 2020 நிகழ்ச்சியில் வந்து கலந்து கொண்டார். அதில் அவர் கலந்து கொண்டவது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
பட விழாக்களுக்கு வர மாட்டீர்கள், விருதுகள் வாங்க மட்டும் வருவீர்களா என பல ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
ஹிந்தியில் நயன்தாராவை விட அதிக சம்பளம் வாங்கும் நடிகைகள் பலரும் அவர்களது படம் சம்பந்தமான அனைத்து விழாக்களிலும் தவறாமல் கலந்து கொண்டு அவர்களது படங்களை விளம்பரப்படுத்துவார்கள். ஆனால், நயன்தாராவுக்கு அப்படி ஒரு பழக்கம் இல்லவே இல்லை.
இந்த சர்ச்சைகளுக்குப் பிறகாவது அவர் மாறுவாரா அல்லது அப்படியே தொடர்வாரா என்பது இனிமேல்தான் தெரியும்.