ஆகஸ்ட் வெளியீட்டில் பின்வாங்கும் ’மெய்யழகன்’: காரணம் என்ன?

ஆகஸ்ட் வெளியீட்டில் இருந்து பின்வாங்கிறது ‘மெய்யழகன்’. இதற்கு காரணம் என்னவென்றும் தெரியவந்துள்ளது.

பிரேம் குமார் இயக்கத்தில் கார்த்தி, அரவிந்த் சுவாமி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘மெய்யழகன்’. 2டி நிறுவனம் தயாரித்து வரும் இதன் படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் இதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது.

தற்போது ’மெய்யழகன்’ பணிகளை முடித்து ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியிடலாம் என்று பணிகளைத் துரிதப்படுத்தியது. ஆனால், அதிலிருந்து பின்வாங்கிவிட்டது. ஏனென்றால் அதே தேதியில் ‘தங்கலான்’ வெளியாக இருக்கிறது. இரண்டுமே சக்தி பிலிம் பேக்ட்ரி நிறுவனம் தான் தமிழக உரிமையை கைபற்றி இருக்கிறது.

‘மெய்யழகன்’ படத்தினை ஆகஸ்ட் மாதம் இறுதி அல்லது செப்டம்பரில் வெளியிடலாம் என்று முடிவு செய்திருக்கிறது படக்குழு. விரைவில் படத்தின் டீஸரை வெளியிட்டு, விளம்பரப்படுத்தும் பணிகளைத் தொடங்க படக்குழு திட்டமிட்டு இருக்கிறது.

Read Previous

எனது படங்களில் பிரமாண்டமாக உருவானது “மழை பிடிக்காத மனிதன்” தான் – விஜய் ஆண்டனி

Read Next

பிரபாஸுக்கு நாயகியாக ராஷ்மிகா மந்தனா

Most Popular