செவன்ஸ்க்ரீன் ஸ்டுடியோ தயாரிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடித்து அக்டோபர் 19ம் தேதி வெளிவந்த படம் ‘லியோ’.
இப்படம் 12 நாட்களில் 540 கோடி வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் சற்று முன்னர் அறிவித்துள்ளது.
“12 நாட்களிலேயே 540 கோடிக்கும் கூடுதலான வசூல்…, ‘லியோ’ உலக அளவில் பாக்ஸ் ஆபீசில் சம்பவம்,” என அவர்களது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்கள்.
முதல் நாள் வசூலாக 148 கோடி, ஒரு வார வசூலாக 461 கோடி என ஏற்கெனவே வசூல் பற்றிய அதிகாரப்பூர்வத் தகவலை அறிவித்திருந்தார்கள்.
நாளை இப்படத்தின் வெற்றி விழா சென்னையில் நடைபெற உள்ள நிலையில் இன்று இந்த 540 கோடி வசூல பற்றி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.