ஐன்பேக் ஸ்டுடியோஸ், பிரதாப் கிருஷ்ணா, மனோஜ் குமார் தயாரிப்பில், தயாள் பத்மநாபன் இயக்கத்தில், வரலட்சுமி சரத்குமார், சந்தோஷ் பிரதாப் நடிக்கும் “கொன்றால் பாவம்” படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது.
இந்நிகழ்வில் சினிமா பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு வாழ்த்தினர். படப்பிடிப்பு நவம்பர் 1-ஆம் தேதி ஹைதராபாத் ராமோஜி பிலிம் சிட்டியில் ஆரம்பமாக உள்ளது.
1981-களில் நடக்கும் க்ளாஸிக் க்ரைம் த்ரில்லர் கதையாக உருவாக உள்ள இந்தப் படம் மோகன் ஹப்பு எழுதிய பிரபல கன்னட நாடகத்தை அடிப்படையாகக் கொண்டது. இப்படத்தில் ஈஸ்வரி ராவ், சார்லி, மனோபாலா, ஜெயக்குமார், மீசை ராஜேந்திரன், சுப்ரமணியம் சிவா, இம்ரான், சென்றாயன், டிஎஸ்ஆர் சீனிவாசன், யாசர், கவிதா பாரதி, தங்கதுரை, கல்யாணி மாதவி ஆகியோரும் நடிக்க உள்ளனர்.
கன்னடத்தில் இரு முறை மாநில விருதுகளைப் பெற்ற இயக்குநர் தயாள் பத்மனாபன், இந்தக் கதையை முதலில் கன்னடத்தில் இயக்கினார். கன்னடத்தில் இத்திரைப்படம் சிறந்த படம், சிறந்த இயக்கநர் மற்றும் சிறந்த துனை நடிகைக்கான கர்நாடக மாநில விருதுகளை பெற்றது. பிறகு, பிரபல தயாரிப்பாளாரான அல்லு அரவிந்தின் தயாரிப்பில் தெலுங்கிலும் ரீமேக் செய்யப்பட்டு அதை இயக்கிய தயாள் பத்மநாபனே இப்போது தமிழிலும் இயக்க உள்ளார்.
விழுப்புரத்தில் பிறந்த தமிழரான தயாள் பத்மநாபன், கன்னடத்தில் 18 திரைப்படங்களையும், தெலுங்கில் ஒரு திரைப்படத்தையும் இயக்கியுள்ளார். மேலும் அவர் கன்னட மொழியில் 8 திரைப்படங்களையும் தயாரித்துள்ளார்.