ஸ்ரீ சீரடி சாய் மூவிஸ், சார்பில் ஸ்ரீ மற்றும் காவ்யா வழங்க, விஜய் இயக்கத்தில் அருண் விஜய், எமி ஜாக்சன், நிமிஷா விஜயன் நடிக்கும் படம் 'அச்சம் என்பது இல்லையே'.
இப்படத்திற்காக 3.5 கோடி மதிப்பில் லண்டன் சிறைச்சாலை செட் ஒன்றை 2.5 ஏக்கரில் அமைத்திருக்கிறார்கள்.
சமீபத்தில், லண்டனில் முதல் கட்டப் படப்பிடிப்பு நிறைவடைந்து அடுத்தக் கட்டப் படப்பிடிப்பு, தற்போது சென்னையில் தொடங்கி இருக்கிறது. சென்னையின் பின்னி மில்ஸ் பகுதியில் 2.5 ஏக்கர் பரப்பளவில் 3.5 கோடி ரூபாய் செலவில் லண்டன் சிறைச்சாலையை அப்படியே பிரதி எடுததாற் போல் அமைத்துள்ளனர். ராமலிங்க மேஸ்திரி உதவியுடன் கலை இயக்குநர் சரவணன் நூற்றுக்கணக்கான வேலைப்பாடுகள் மற்றும் ஆட்களுடன் லண்டன் சிறையை மறு உருவாக்கம் செய்திருக்கிறார்.
இந்த படப்பிடிப்பில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெளிநாட்டைச் சேர்ந்த துணை நடிகர்கள் பங்கேற்க இருக்கின்றனர். இவர்களுடன் அருண் விஜய் பங்கேற்கும் தீவிரமான ஆக்ஷன் காட்சிகளும் படமாக உள்ளது.
திட்டமிட்டபடி படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருவதால் தயாரிப்பாளர் மகிழ்ச்சியாக இருக்கிறாராம். இயக்குநர் விஜய்யும் திட்டமிட்டபடி அந்த நேரத்திற்குள்ளோ அல்லது அதற்கு முன்போ மிகச்சரியாக படப்பிடிப்பை முடித்து விடுகிறாராம். அதனால், 'அச்சம் என்பது இல்லயே' படப்பிடிப்பும் திட்டமிட்ட காலத்திற்கு முன்பாகவே முடிந்து விடும் என்கிறார்கள்.
லண்டனில் ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப் பட்டபோது, அருண் விஜய்க்கு தீவிரமான காயம் ஏற்பட்டு தசைநாரில் பாதிப்பு ஏற்பட்டது. உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் வலியுறுத்தியும் இந்த இடைவேளையால் படப்பிடிப்பு பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக படப்பிடிப்பு முடித்ததும் சிகிச்சை என்பதில் அருண் விஜய் உறுதியாக இருந்தார். பிஸியோதெரபிஸ்ட் உதவியுடன் வலியைப் பொறுத்துக் கொண்டு படப்பிடிப்பில் பங்கேற்றாராம்.