சத்தமின்றி முடிவடைந்த கவின் படம்

எந்தவொரு அறிவிப்புமே கொடுக்காமல், கவின் புதிய படமொன்றை முடித்துள்ளார்.

’ஸ்டார்’ மற்றும் ‘கிஸ்’ ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வந்தார் கவின். இதில் ‘ஸ்டார்’ படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்றது. ‘கிஸ்’ படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு மட்டும் பாக்கி இருக்கிறது. மே மாதத்தில் ‘ஸ்டார்’ படத்தினை வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது.

இதனிடையே, தனது அடுத்த படத்தின் படப்பிடிப்பை சத்தமின்றி முடித்துள்ளார் கவின். நெல்சன் தயாரித்துள்ள இந்தப் படத்தினை அவருடைய உதவியாளர் சிவபாலன் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் யாரெல்லாம் நடித்துள்ளார்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்ட எதையுமே படக்குழுவினர் இன்னும் அறிவிக்கவில்லை.

ஒரே கட்டமாக சென்னையில் 46 நாட்களில் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் முடித்துள்ளது படக்குழு. விரைவில் இந்தப் படம் தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read Previous

தமன்னா படப்பிடிப்பு நிறுத்தம்: சுகாதாரத்துறை அதிகாரிகள் அதிரடி

Read Next

தனுஷிற்காக பிரியங்கா மோகன் தாராளம்

Most Popular