’நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தின் விளம்பர பாடலுக்கு நடனமாடியிருக்கிறார் பிரியங்கா மோகன்.
தனுஷ் இயக்கி, தயாரித்து வரும் படம் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’. ‘காலா’ படத்திற்குப் பிறகு மீண்டும் தனது வுண்டர்பார் நிறுவனத்தினை இந்தப் படத்தின் மூலமாக தொடங்கியிருக்கிறார். இதன் படப்பிடிப்பு சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது.
தற்போது இந்தப் படத்தின் விளம்பரப் பாடலுக்காக பிரியங்கா மோகன் நடனமாடியிருக்கிறார். இந்தப் பாடலை தான் ‘ராயன்’ வெளியானபின்பு வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இதற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார்.
‘டாக்டர்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, முன்னணி நடிகர்களுடன் மட்டுமே நடிப்பது என்று முடிவெடுத்து பணிபுரிந்து வந்தார் பிரியங்கா மோகன். தற்போது தனுஷ் இயக்கி வரும் படம் என்பதால் மட்டுமே இதற்கு நடனமாடிக் கொடுத்துள்ளார்.
தனுஷ் – பிரியங்கா மோகன் இருவரும் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் இணைந்து நடித்துவர்கள் என்பது நினைவுக் கூரத்தக்கது.