’மஞ்சும்மல் பாய்ஸ்’ திரைப்படம் மற்றுமொரு மாபெரும் சாதனையை நிகழ்த்தி இருக்கிறது.
சிதம்பரம் இயக்கத்தில் சவுபின் ஷாயிர், ஸ்ரீநாத் பாஷி, பாலு வர்கீஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’. கேரளாவில் பிப்ரவரி 22-ம் தேதி வெளியானது. மலையாளத்தை விட தமிழில் வசூல் மழையை பொழிந்து வருகிறது. ரஜினி, கமல், தனுஷ், விக்ரம், சித்தார்த் உள்ளிட்ட பல்வேறு நடிகர்கள், முன்னணி இயக்குநர்கள் எனப் பலரும் இந்தப் படக்குழுவினரைப் பாராட்டிவிட்டார்கள்.
ஒட்டுமொத்த வசூலில் தினமும் தொடர்ச்சியாக பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி வருகிறது ‘மஞ்சும்மல் பாய்ஸ்’. தற்போது உலகளவில் ஒட்டுமொத்த வசூலில் அதிக வசூல் செய்த மலையாள படம் என்ற மாபெரும் சாதனை நிகழ்த்தி இருக்கிறது. இதற்கு முன்னதாக ‘2018’ என்ற படம் 175 கோடி ரூபாய் வசூல் செய்து முதல் இடத்தில் இருந்தது.
176 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்து ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ திரைப்படம் முதல் இடத்தினை பிடித்துள்ளது. கேரளாவில் அதிக வசூல் செய்த படம் என்ர இடத்திற்கு இன்னும் வரவில்லை. ஏனென்றால் தொடர்ச்சியாக கேரளாவை விட தமிழகத்தில் தான் அதிக வசூல் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
விரைவில் 200 கோடி வசூல் செய்த முதல் மலையாள படம் என்ற மாபெரும் சாதனையை நிகழ்த்தும் என்று வர்த்தக நிபுணர்கள் கணித்துள்ளனர்.