மருத்துவமனையில் நடைபெற்ற தமன்னா படப்பிடிப்பு, சுகாதாரத்துறை அதிகாரிகளால் நிறுத்தப்பட்டது.
மும்பையில் ஜெ.ஜெ என்ற அரசு மருத்துவமனை மிகவும் பெருமைக்குரியது. இங்கு படப்பிடிப்பு நடத்துவதற்கு பெரும்பாலும் அனுமதிப்பதில்லை. 2004-ம் ஆண்டு அனுமதி அளிக்கப்பட்டு, பின்பு நோயாளிகளுக்கு தொந்தரவு ஏற்பட்டதாக கூறி நிறுத்தப்பட்டது.
இதனிடையே, தமன்னா நடித்து வரும் இந்திப் படத்தின் படப்பிடிப்பு ஜெ.ஜெ மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ளது. சில மணி நேரத்திலேயே சுகாதாரத்துறை அதிகாரிகளின் உத்தரவின் பேரில் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இது படக்குழுவினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஏனென்றால், சுகாதாரத்துறையினரிடம் முறையான அனுமதிப் பெற்றே படப்பிடிப்பினை தொடங்கினார்கள். சுகாதாரத்துறையினர் அனுமதியை வைத்து, மருத்துவமனை நிர்வாகமும் அனுமதி அளித்திருக்கிறது. ஆனால் இப்போது அதிகாரிகளே நிறுத்தச் சொன்னால் மருத்துவமனை நிர்வாகும் நிறுத்தச் சொல்லியிருக்கிறது.
இதனால் தங்களுக்கு பல கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும், மருத்துவமனையில் நீதிமன்றம் போன்ற அரங்கம் அமைத்து படப்பிடிப்பு நடத்தியதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். ஆனால், சுகாதாரத்துறையில் அனுமதி அளித்தது யார் என்ற விசாரணையும் தொடங்கியிருக்கிறது.