மீண்டும் பிரிந்த ஏ.எல்.விஜய் – ஜி.வி.பிரகாஷ் கூட்டணி

ஏ.எல்.விஜய் – ஜி.வி.பிரகாஷ் கூட்டணி மீண்டும் பிரிந்துள்ளது.

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவான பெரிய முதலீட்டு படங்கள் பலவற்றுக்கும் இசையமைப்பாளராக பணிபுரிந்தவர் ஜி.வி.பிரகாஷ். இருவருமே நெருங்கிய நண்பர்களாகவும் வலம் வந்தனர். ஜெயம் ரவி – ஏ.எல்.விஜய் இணைப்பில் வெளியான ‘வணங்கான்’, ‘தியா’ உள்ளிட்ட சில படங்களுக்கு மட்டுமே இந்தக் கூட்டணி இணைந்து பணிபுரியவில்லை.

தற்போது இந்தக் கூட்டணி பிரிந்துவிட்டது என்று திரையுலகினர் தெரிவிக்கிறார்கள். ஏ.எல்.விஜய் இயக்கத்தில் மாதவன் – கங்கனா ரணாவத் கூட்டணி நடிப்பில் புதிய படமொன்று உருவாகி வருகிறது. இந்தப் படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார்.

இந்தப் படத்தினைத் தொடர்ந்து ஏ.எல்.விஜய் இயக்கவுள்ள அடுத்தப் படத்தின் இசையமைப்பாளராக ஹாரிஸ் ஜெயராஜ் பணிபுரியவுள்ளார். இனி வரும் படங்களுக்கு வெவ்வேறு இசையமைப்பாளர்களோடு பணிபுரியவும் ஏ.எல்.விஜய் திட்டமிட்டு இருக்கிறார்.

Read Previous

திகட்டாத காதல் காவியமாக உருவாகும் ‘ஆலன்’

Read Next

தமன்னா படப்பிடிப்பு நிறுத்தம்: சுகாதாரத்துறை அதிகாரிகள் அதிரடி

Most Popular