விஜய் டிவி – ரசிகர்களைக் கவர்ந்த ‘காற்றின் மொழி’ தொடர்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘காற்றின் மொழி’ தொடர் நேயர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதில் கண்மணி கதாபாத்திரத்துக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. கண்மணிக்கு வாய் பேச இயலாத ஒரு கதாபாத்திரமாகும். ஆனால், கண்மணிக்கு கண் அழகாகப் பேசுகிறது என்று அவருக்கு இளையவர்கள் மத்தியில் ஆதரவு பெருகி வருகிறது.

ராம்குமார் இயக்கும் இத் தொடரில், கண்மணியாக பிரியங்கா ஜெயின், சந்தோஷ் ஆக சஞ்சீவ், அப்பா சுப்புவாக மனோகர், அம்மா ராஜியாக அனிலாஸ்ரீ ஆகியோர் நடிக்கின்றனர் .

கண்மணி, சந்தோஷ் இவர்களது காட்சிகள் தான் இத் தொடரில் அதிக வரவேற்பு பெறுபவையாக உள்ளன. வரும் வாரங்களில் கண்மணியின் அப்பா ஒரு எதிர்பாராத சதியால் லாக்கப்பில் வைக்கப்பட அவரை அதிலிருந்து கண்மணி எப்படி மீட்கிறாள் என்பது விறுவிறுப்பான காட்சிகள் மூலம் சொல்லப்பட உள்ளது.

சந்தோஷ் மாமாவின் சதியால் இது நடைபெறும் வேளையில் சந்தோஷ் தன் மாமாவின் கெடுபிடியை மீறி எப்படி கண்மணிக்கு உதவி செய்கிறான். மேலும் சந்தோஷுக்கு ஒரு எதிர்பாராத ஆபத்தும் நேரிட, அது யாரால் எப்படி நிகழப் போகிறது என்பதை சஸ்பென்ஸுடன் வரும் வாரங்களில் காணலாம்.

விஜய் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு ‘காற்றின் மொழி’ தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.

Read Previous

வி 1 – டிரைலர்

Read Next

‘ஸ்பீட், கெட் செட் கோ’ – விஜய் டிவியில் புதிய நிகழ்ச்சி

Most Popular