கைதி, எனக்கு இரண்டாவது இன்னிங்ஸ் – நரேன்

டிரீம் வாரியர் பிக்சர்ஸ் எஸ்.ஆர்.பிரபு, எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு மற்றும், விவேகானந்தா பிக்சர்ஸ் திருப்பூர் விவேக் தயாரிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கார்த்தி, நரேன், ரமணா, மரியம் ஜார்ஜ் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘கைதி’.

தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 25ம் தேதி வெளிவர உள்ள இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நரேன் நடித்துள்ளார்.

மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்த ‘சித்திரம் பேசுதடி, அஞ்சாதே’ படங்களில் நடித்த நரேன் ஒரு சிறு இடைவெளிக்குப் பிறகு ‘கைதி’ படத்தின் நடித்துளளார்.

‘கைதி’ படத்தில் நடித்தது பற்றிய அனுபவங்களை அவர் கூறினார்.

“கைதி’ எனக்கு ஒரு செகண்ட் இன்னிங்ஸ்ஸா இருக்கும்னு தோணுது.

இந்தப் படத்துல நான் போலீஸ் ஸ்பெஷல் டாஸ்க் ஃபோர்ஸ் அதிகாரியா நடிச்சிருக்கேன். முதல்ல கார்த்தி தான் எனக்கு போன் பண்ணினார். கார்த்தியும் நானும் நெருக்கமான நண்பர்கள். பர்ஸனலா எல்லாமே பேசிப்போம்.

இயக்குநர் இந்தக் கேரக்டருக்கு என் பேர சொன்னவுடனே கார்த்தி நான் போன் பண்றேன்னு சொல்லி கூப்பிட்டிருக்கார். ‘அஞ்சாதே’ படத்துக்கப்புறம் நிறைய போலீஸ் கேரக்டர் அது மாதிரியே இருக்கும்னு நான் பண்ணல. இதுல எப்படினு கேட்டேன். நல்ல கேரக்டர்னு சொன்னார். நீங்க பண்றீங்களானு கேட்டேன் ஆமானு சொன்னார். உடனே நான் ஒத்துக்கிட்டேன்.

கார்த்தி ஒரு படத்த அவ்வளவு சீக்கிரம் ஒத்துக்க மாட்டார் அவர் இருக்கார். அப்புறம் டைரக்டர் லோகேஷோட மாநகரம் பார்த்தேன். எனக்கு ரொம்ப பிடிச்சது, இப்படி ஒரு டீம்ல வாய்ப்பு கிடைக்கும்போது ஏன் பண்ணக்கூடாது. ஆனா லோகேஷ் கதை சொன்ன பத்து நிமிஷத்துல தெரிஞ்சுடுச்சு கண்டிப்பா சூப்பாரா இருக்கப் போகுதுனு. படம் நல்லா வந்திருக்கு.

இந்தப் பட யூனிட்டே பரபரனு இருப்பாங்க. சினிமாவ காதலிக்கிற ஒரு டீம். அவ்வளவு காதலோட எல்லோரும் வேலை பார்த்திருக்காங்க. நாங்களும் சந்தோஷமா வேலை பார்த்தோம். படம் எடுக்கும்போதே படம் சூப்பரா இருக்கும்னு நம்பிக்கை இருந்தது. அது சில படங்கள்ல மட்டும்தான் இருக்கும்.

ஷட்டிங் சமயத்துல கார்த்திகூட நிறைய பேசினேன், ஒன்னா இவ்வளவு நாள் கூட இருந்தது இந்த படத்தால தான் நடந்தது. கார்த்தி ரொம்ப தெளிவா இருக்கார். என்ன பண்றோம்கிறது அவருக்கு தெரிஞ்சுருக்கு. அவரோட படங்கள பார்த்தாலே தெரியும்.

இந்தப் படத்தில அவருக்கும் எனக்கும் நிறைய காட்சிகள் இருக்கு. அவருக்கு எனக்கும் நெருக்கமான நட்பு, இருக்கறதால பண்ணும்போது ரொம்ப ஈஸியா இருந்தது. அதே மாதிரி அவருக்கு ஒரு எமோஷனல் பக்கம் இருக்கும். அதுல சூப்பரா பெர்ஃபார்ம் பண்ணிருக்காரு. ரசிகர்களுக்கு கண்டிப்பா பிடிக்கும்.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ், சினிமா மட்டுமே வாழ்க்கையா நேசிக்கிற ஒரு ஆள். அதத் தவிர எதுவும் பேச மாட்டார். எப்பவும் வேலைதான். நான் ஒரு கமல் ஃபேன், அவர் என்னவிட பெரிய ஃபேன். நிறைய ஹாலிவுட் படம் பார்ப்பார், அதப்பத்தி பேசுவோம்.

என்ன புதுசுன்னா, எல்லாரும் ஹாலிவுட் படம் பார்ப்பாங்க. இங்க அது மாதிரி பண்ண ஆசைப்பட்டு வித்தியாசமா பண்ணுவாங்க. படம் நல்லாருக்கும். ஆனா படம் பெரிசா போகாது. டீவியில பார்த்தா நல்லாருக்கேனு சொல்லுவோம்.

இங்க படம் ஓட இங்க இருக்க ஆடியன்சுக்கு அதில இன்னும் சில விஷயங்கள் சேர்க்கனும். அதில் கில்லாடி லோகேஷ். அவர் வித்தியாசமா பண்ற அதே நேரத்தில இங்க இருக்க ஆடியன்சுக்கு என்ன பண்ணனும்னு தெளிவு இருக்கார். அவர் பெரிய இடத்துக்கு போவாரு.

இந்த வருட தீபாவளி கொண்டாட்டமா இருக்கும். ‘கைதி’ கமர்ஷியல் படம், தான் ஆனா வித்தியாசமா இருக்கும், புதுசா இருக்கும். பிகில், கைதி ரெண்டும் பாருங்க, பிடிக்கும்,” என்றார் நரேன்.

Read Previous

அஜித், வினோத் கூட்டணியின் ‘வலிமை’

Read Next

விவசாயிகளுக்கு விஜய் சேதுபதி கட்டித் தந்த கட்டடம்

Most Popular