ஸ்வேத் தயாரிப்பில் நடிகர் நிதின்சத்யா தயாரிக்கும் படம் ‘ஜருகண்டி’. பிச்சு மணி இயக்கத்தில் போபோ சசி இசையமைப்பில் ஜெய், ரெபா மோனிகா ஜான் மற்றும் பலர் நடிக்கும் படம். படம் பற்றி படத்தின் தயாரிப்பாளர் நிதின் சத்யா கூறியதாவது, “சமீப காலங்களில் ரசிகர்கள் கொண்டாடும் நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்கள் லிஸ்டில் ஜருகண்டியும் நிச்சயம் சேரும். சமீபமாக நல்ல படங்களாக ரிலீஸ் ஆகி, ரசிகர்களை திரையரங்குகளுக்கு அழைத்து வருவதை பார்க்கையில் மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. தனித்துவமான கதைகளை ரசிகர்கள் கொண்டாடும் விதம் எனக்கு மிகப் பெரிய நம்பிக்கையைத் தருவதோடு, ஜருகண்டி இந்த சீசனில் ரிலீஸ் ஆவதற்கு மிகப் பொருத்தமான படம் என உறுதியாக நம்ப வைக்கிறது. இந்த படத்தின் மூலம் ஜெய் நட்சத்திர அந்தஸ்துக்கு உயர்வார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. நாங்கள் நெருங்கிய நண்பர்களாக இருப்பது இந்த படத்துக்கு எந்த வகையிலும் தடையாக இல்லை. உண்மையில், அவர் முன்பு இருந்ததைவிட அதிக பொறுப்புடனும், கவனத்துடனும் செயல்பட்டார். படப்பிடிப்பு முழுவதும் நல்ல முறையில் நடக்க முழு ஒத்துழைப்பைக் கொடுத்தார். அவர் தன்னை ஒரு சிறந்த நடிகனாக மேம்படுத்த மிகவும் முயற்சிகள் எடுத்து நடித்திருக்கிறார். படத்தில் உள்ள ஒவ்வொரு கதாபாத்திரமும் ரசிகர்களை முழுக்க முழுக்க ரசிக்க வைக்கும். ரெபா மோனிகா ஜான் பக்கத்து வீட்டு பெண் போன்ற ஒரு கதாபாத்திரத்தில் மிகவும் ட்ரெண்டியாக நடித்திருக்கிறார், இது உடனடியாக பார்வையாளர்களை ஈர்க்கும். டேனியல் ஆன்னி போப், ரோபோ ஷங்கர், இளவரசு, போஸ் வெங்கட், ஜி.எம்.குமார் என எல்லோரும் அவர்களின் தனித்துவமான பாணியில் நடித்துள்ளனர். போபோ சசி இசையில் பாடல்கள் ரசிகர்களைக் கவர்ந்திருக்கிறது, அவரது பின்னணி இசையும் படத்தின் முக்கிய அம்சமாக இருக்கும் என்று உறுதியாக நம்புகிறேன்,” என்றார்.