முதலில் ‘தக் லைஃப்’, பின்பு ‘இந்தியன் 3’: கமல் திட்டம்

முதலில் ‘தக் லைஃப்’ படத்தின் வெளியீட்டை முடித்துவிட்டு பின்பு ’இந்தியன் 3’ திட்டமிடலாம் என்று கமல் முடிவு செய்திருக்கிறார்.

ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியான படம் ‘இந்தியன் 2’. லைகா நிறுவனம் தயாரிப்பில் உருவான இந்தப் படம் எதிர்பார்த்த வரவேற்பு பெறவில்லை. மேலும், இணையத்தில் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. மேலும், ‘இந்தியன் 3’ படத்தையும் வெளியீட்டுக்கு தயார்படுத்தி வந்தது படக்குழு.

தற்போது முதலில் ‘தக் லைஃப்’ படத்தின் பணிகளை முடித்து வெளியிட முடிவு செய்துள்ளார் கமல். மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் இதில் சிம்பு, அசோக் செல்வன், அபிராமி, த்ரிஷா உள்ளிட்ட பலர் கமலுடன் நடித்து வருகிறார்கள். இதன் படப்பிடிப்பு சுமார் 60% முடிவடைந்து டப்பிங் பணிகளும் தொடங்கப்பட்டுள்ளது.

விரைவில் முழுமையாக படப்பிடிப்பை முடித்து டிசம்பர் அல்லது பொங்கலுக்கு வெளியிட முடிவு செய்திருக்கிறார் கமல். இந்த தேதியில் ‘தக் லைஃப்’ வெளியாகும் பட்சத்தில், அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு தான் ‘இந்தியன் 3’ வெளியாகும் என்று கூறப்படுகிறது.

அதுமட்டுமன்றி, தற்போது ‘கேம் சேஞ்சர்’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் ஷங்கர். அதனை முடித்துவிட்டு தான் ‘இந்தியன் 3’ படத்தின் இதர இறுதிகட்டப் பணிகளில் கவனம் செலுத்த ஷங்கர் முடிவு செய்திருக்கிறார்.

Read Previous

மீண்டுமொரு இந்தி படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் ஒப்பந்தம்

Read Next

இறுதிகட்டப் படப்பிடிப்பில் ‘விடாமுயற்சி’

Most Popular