‘ட்ராமா’ குழுவினரை ஆச்சரியப்படுத்திய கிஷோர்

மலையாள இயக்குனர் அஜு கிழுமலா இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் “ட்ராமா”. 

இந்த படத்தில் கிஷோர் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஜெய்பாலா நாயகனாகவும்,  காவ்யா பெல்லு நாயகியாகவும் நடித்திருக்கிறார்கள். 

இப் படம் ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்ட ஒரு படம். இதற்காக படத்தில் நடிக்கும் நடிகர்களை வைத்து சுமார் 180 நாட்கள் ரிகர்சல் நடத்த திட்டமிட்டிருந்தது.  ஆனால், நடிகர் கிஷோர் இந்த ரிகர்சலை வெறும் 7 நாட்களில் முடித்து, படக்குழுவினர் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல், இரவு இரண்டு மணிக்கெல்லாம் அடுத்த காட்சிக்கான வசனங்களைப் படித்து படப்பிடிப்பு தளத்தில் தூங்காமல் ரிகர்சல் செய்து கொண்டிருந்தாராம் கிஷோர். 

மேலும், படப்பிடிப்பு தளத்தில் தனக்கான உணவைத் தானே சமைத்தும் சாப்பிட்டிருக்கிறார் கிஷோர். சக நடிகர்களிடம் எப்போதும் நட்போடு பழகும் பழக்கம் கொண்ட கிஷோர், இப்படத்தில் நடித்த சக நடிகர்களுக்கும் நடிப்பைக் கற்றுக் கொடுத்து படப்பிடிப்பில் ஒரு ஆசானாக விளங்கியிருக்கிறார்.

‘ட்ராமா’ படம் தனது சினிமா வாழ்க்கையில் மிகவும் முக்கியமான படமாக இருக்கும் எனவும் நம்பிக்கை வைத்துள்ளார் கிஷோர்.  

சசிகலா ப்ரொடக்‌ஷன்ஸ் இப்படத்தை இந்த வாரம் செப்டம்பர் 23ம் தேதி வெளியிடுகிறது. 

Read Previous

‘வெந்து தணிந்தது காடு’ வெற்றி, மிகப் பெரிய மகிழ்ச்சி – சிம்பு

Read Next

ஆங்கிலப் படத்தைத் தழுவி எடுக்கப்படும் ‘மர்டர் லைவ்’

Most Popular