கொரானோவே கருணை காட்டு – விக்னேஷ் சிவன் உருக்கம்

“கொரானா கோ, கோ கொரானோ, கொரானாவே திரும்பிப் போ” என பல இடங்களில் கிண்டலாகப் பேசப்பட்டாலும் உண்மையில் மக்கள் கொரானோ எப்போது ஒழிந்து போகும், எப்போது பழையபடி நம் வேலையைப் பார்க்கலாம் என்ற ஆவல்தான் பலரிடமும் உள்ளது.

நேற்று இரவு இந்தியப் பிரதமரின் வேண்டுகோளின்படி நாட்டில் பலரும் அவர்களது வீடுகளில் விளக்கேற்றினார்கள்.

நடிகை நயன்தாரா, அவரது காதலர் விக்னேஷ் சிவனுடன் விளக்கேற்றினார். அது பற்றிய புகைப்படத்தைப் பதிவிட்டு, கொரானோவிடம் வேண்டுகோளும் வைத்துள்ளார்.

அதில், “டியர் கொரானோ, கடவுளுக்காக எங்களது பிரார்த்தனையாக மட்டுமே இதைச் செய்வோம். ஆனால், இப்போது உனக்காகச் செய்கிறோம். உன்னிடம் வேண்டுகோளாகவும், பிரார்த்தனையாகவும் வைக்கிறேன்,

எங்களை பழையபடி வர வழிவிடு. கொரானாவே போ, கொரானாவே கொஞ்சம் கருணை காட்டு, தயவு செய்து போய்விடு,” என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

Read Previous

நடிகர் சங்க கொரானோ நிதி வசூல் – 15 லட்சம் மட்டுமே

Read Next

யுடியூப் சேனல் ஆரம்பிக்கும் ஹன்சிகா

Most Popular