கொச்சியில் மாணவ, மாணவியரை சந்தித்த ‘கோப்ரா’ படக்குழுவினர்

செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ சார்பில் எஸ்.எஸ். லலித்குமார் தயாரிப்பில், அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ஏஆர் ரகுமான் இசையமைப்பில்,  விக்ரம், ஸ்ரீநிதி ஷெட்டி, மிருணாளினி ரவி, மீனாட்சி கோவிந்தராஜன், இர்பான் பதான், கேஎஸ் ரவிக்குமார் மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘கோப்ரா’.

இப்படம் ஆகஸ்ட் 31 ஆம் தேதியன்று தியேட்டர்களில் வெளியாகிறது.  படத்தை ரசிகர்களிடம் பிரபலப்படுத்துவதற்காக விக்ரம், படத்தில் நடித்துள்ள நடிகைகள் ஸ்ரீநிதி ஷெட்டி, மிருணாளினி ரவி, மீனாட்சி கோவிந்தராஜன் பெங்களூரூக்கு சென்றனர். அங்கு அவர்களுக்கு பிரம்மாண்டமான முறையில் ரசிகர்கள் திரண்டு வரவேற்பளித்தனர்.

திருச்சி, மதுரை, கோவை, சென்னை ஆகிய இடங்களில் ரசிகர்களை சந்தித்த கோப்ரா படக்குழுவினர், கேரள ரசிகர்களை சந்திக்கும் வகையில் கொச்சிக்கு பயணம் செய்தனர். கொச்சி விமான நிலையத்தில் படக்குழுவினருக்கு ஏராளமான ரசிகர்கள் திரண்டு உற்சாகமான வரவேற்பளித்தனர்.

இதனைத் தொடர்ந்து கேரள பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர். இந்த சந்திப்பில் விக்ரம், நடிகர் ரோஷன் மேத்யூ, நடிகைகள் மியா ஜார்ஜ், மீனாட்சி கோவிந்தராஜன், மிருணாளினி ரவி ஆகியோர் கலந்து கொண்டனர்.

அடுத்து கொச்சியில் உள்ள பிரபலமான ஜெயின் கல்லூரி வளாகத்தில் 'கோப்ரா' பட குழுவினர், மாணவ மாணவிகளை சந்தித்தனர். அவர்களின் கேள்விகளுக்கு படக்குழுவினர் பதிலளித்து உற்சாகப்படுத்தினர்.

விக்ரம் தலைமையிலான படக் குழுவினரின் தமிழகப் பயணத்தை போல், கேரள பயணமும் எதிர்பார்த்ததை விட கூடுதலான வரவேற்பைப் பெற்றதால் 'கோப்ரா' பட குழு உற்சாகமாக உள்ளது.

Read Previous

டைரி – விமர்சனம்

Read Next

பெங்களூரூவில் ரசிகர்களை சந்தித்த ‘கோப்ரா’ படக்குழுவினர்