ராமதாஸ் வாழ்க்கை வரலாற்றை இயக்குகிறேனா? – சேரன் விளக்கம்

ராமதாஸ் வாழ்க்கை வரலாற்றை இயக்க இருப்பதாக வெளியான தகவலுக்கு சேரன் விளக்கம் அளித்துள்ளார்.

மீண்டும் தீவிரமாக இயக்குநர் களத்தில் இறங்கியுள்ளார் சேரன். தற்போது ‘ஜேர்னி’ என்ற வெப்சீரிஸை இயக்கியுள்ளார். 

இது சோனி தளத்தில் வெளியாகியுள்ளது. இதற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்துள்ளது. மேலும், சுதீப் நடிக்கவுள்ள புதிய படத்தினையும் இயக்க ஒப்பந்தமாகியுள்ளார் சேரன்.

கடந்த சில தினங்களாக பாமகவின் நிறுவனர் ராமதாஸின் வாழ்க்கை வரலாறு படமாக உருவாக இருப்பதாகவும், அதை சேரன் இயக்கவுள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகின. 

இதில் ராமதாஸாக சரத்குமார் நடிக்க இருப்பதாகவும் குறிப்பிட்டார்கள். இதை வைத்து பலரும் பல்வேறு கருத்துகள் தெரிவித்து வந்தார்கள்.

இந்த விவகாரம் எக்ஸ் தளத்தில் விவாத பொருளாக மாறியது. 

இதனைத் தொடர்ந்து இயக்குநர் சேரன் தனது எக்ஸ் தளத்தில் “நண்பர்களே.. சரத்குமார் சார் அவர்களும் நானும் ஒரு படம் இணைந்து வேலை செய்யப்போகிறோம்.. அதையே அவர் நேற்று வெளிப்படுத்தினார்… ஆனால் அது யாருடைய வாழ்க்கை வரலாறும் அல்ல.. அது வேறு படம்.. தவறான கருத்துக்களை எந்த அறிவிப்பும் இன்றி பகிரவேண்டாம்.. நன்றி” என்று தெரிவித்துள்ளார்.

Read Previous

மீண்டும் நடிகர் சங்க கட்டிடப் பணிகள் தொடக்கம்: நடப்பது என்ன?

Read Next

’தேவரா’ வெளியீட்டு தள்ளிவைப்பு

Most Popular