‘பாரம்’ – சொன்னபடி போஸ்டர் ஒட்டிய மிஷ்கின்

2018ம் ஆண்டிற்கான தமிழில் சிறந்த பிராந்திய மொழித் திரைப்படத்திற்கான தேசிய விருது பெற்ற திரைப்படம் ‘பாரம்’. இந்தப் படம் இரு தினங்களுக்கு முன்பு தியேட்டர்களில் வெளியானது.

இயக்குனர் வெற்றி மாறன் அவரது படத் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் இப்படத்தை வெளியிட்டுள்ளார்.

வெளியீட்டிற்கு முன்பாக இந்தப் படத்திற்காக நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய இயக்குனர் மிஷ்கின், “தமிழ்நாட்டில் இந்தப் படத்திற்காக நான் போஸ்டர் ஒட்டப் போகிறேன். எனக்கும் ராமுக்கும் வேலையில்லை. அதனால் சாலை வழியே பயணம் செய்து போஸ்டர் ஒட்டுவதை செய்வோம்,” என்றார்.

சொன்னபடியே இன்று கோயம்புத்தூரில் ‘பாரம்’ படத்திற்காக அவர் போஸ்டர் ஒட்டினார்.

மிஷ்கின் போஸ்டர் ஒட்டியது குறித்து படத்தின் இயக்குனர் பிரியா கிருஷ்ணசாமி கூறுகையில், “

‘பாரம்’ படம் மீது இயக்குநர் மிஷ்கின் காட்டிவரும்  அன்புக்கு விலை மதிப்பே கிடையாது. அவர் இந்தியாவின் மிகச் சிறந்த இயக்குநர்களில் ஒருவர். 

இவ்வளவு உயரத்தில் இருந்து கொண்டு புதுமுகங்களான எங்கள் மீது அவர் காட்டும் அன்பும் ஆதரவும் பிரமிப்பானது. இந்த அன்புக்கு ஈடு இணை ஏதுமில்லை. 

‘பாரம்’ படத்தின் டிரைலர் வெளியீட்டின் போது அவர் பேசியதிலிருந்தே இப்படம் பற்றிய எதிர்பார்ப்பு எல்லோரிடத்திலும்  பரவ ஆரம்பித்துவிட்டது. 

தற்போது அவர் போஸ்டர் ஒட்டியதன் மூலம் படத்தின் மீதான கவனம் பன்மடங்கு பெருகி இருக்கிறது. இந்த அன்பு எங்களை பெரு மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது,” என்றார்.

Read Previous

பிப்ரவரி 21, 2020 வெளியான படங்கள்…

Read Next

டிவி தொடர்களுக்கு சினிமா தலைப்புகள் – கேயார் கண்டனம்

Most Popular