தமிழ் சினிமாவில் கத்தி, அருவா ஆகியவற்றை அதிகம் வைத்து படங்களை இயக்குபவர்களில் ஹரி தான் முதன்மையானவர் என்று சொன்னால் ஆச்சரியப்படுவதற்கில்லை.
அவருடைய படங்களில் வில்லன்கள் டாடா சுமோவில் பறந்து, அருவா, கத்தியால் எதிரிகளை வெட்டித் தள்ளுவார்கள். அதனால், இயக்குனர் ஹரியை ‘அருவா’ ஹரி என்று கூட பலர் குறிப்பிட்டு கிண்டலாக எழுதுவார்கள்.
இப்போது தன்னை கிண்டல் செய்யப் பயன்படுத்திய ‘அருவா’ என்ற பெயரையே தன் அடுத்த படத்தின் தலைப்பாக வைத்துவிட்டார் ஹரி.
தமிழ் சினிமாவில் ஏற்கெனவே, ‘அருவா வேலு’ என்ற பெயரில் 1996ம் ஆண்டு நாசர், ஊர்வசி நடித்த படம் வெளியாகி உள்ளது. தற்போது பத்திரிகையாளர் ஆதி, ‘அருவா சண்ட’ என்ற பெயரில் ஒரு படத்தை இயக்கி முடித்திருக்கிறார். அந்தப் படங்களின் பெயரில் பாதியை தனது படத்தின் பெயராக்
சூர்யாவின் 39வது படமாக உருவாக உள்ள இந்தப் படத்தை ஸ்டுடியோ க்ரீன் தயாரிக்கிறது. இமான் இசையமைக்கிறார்.
சூர்யாவின் 39வது படத்தை சிவா தான் இயக்குவதாக இருந்தது. ஆனால், அவர் திடீரென ரஜினிகாந்த் நடிக்கும் ‘அண்ணாத்த’ பட வாய்ப்பு கிடைத்ததும் சூர்யாவை விட்டுவிட்டுப் போய்விட்டார்.
ஏப்ரல் மாதம் ‘அருவா’ படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகிறது. இந்த வருட தீபாவளிக்கு படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார்