கார்த்திக் சுப்பராஜ் வழங்கும் ‘அல்லி’

‘பேட்ட’ இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ், அவருடைய ஸ்டோன் பென்ச் பிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்திலிருந்து  ‘அல்லி’ என்ற சுயாதீன (Independent) படத்தை வெளியிட உள்ளார்.

இப்படத்தை சணல்குமார் சசிதரன் இயக்க நிமிஷா சஜயன், ஜோஜு ஜார்ஜ், அகில் விஸ்வநாத் ஆகியோர் நடித்துள்ளார்கள்.

இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கார்த்திக் சுப்பராஜ் பேசுகையில்,

“நான் ஷார்ட் பிலிம் எடுத்துதான் வந்தேன். ஷார்ட் பிலிம்கறதே ஒரு இன்டிபென்டட் பிலிமோட ஒரு பகுதிதான். பெரிய தயாரிப்பு நிறுவனம் இல்லாம, பெரிய முதலீடு இல்லாம, குறைவான டெக்னீஷியன் வச்சிதான் நான் ஷார்ட் பிலிம் பண்ணேன்.

நான் முதன் முதலா சினிமா பண்ண வாய்ப்பு தேடி அலைஞ்ச போது சரியா அமையலை. ‘ஜிகர்தண்டா’ கதையை வச்சிக்கிட்டுதான் முதல்ல தயாரிப்பாளர் தேடினேன், கிடைக்கலை.சரி, ஒரு இன்டின்டென்ட் படம் பண்ணலாம்னு கதை எழுத ஆரம்பிச்சதுதான் ‘பீட்சா’ படம்.

நான் சொந்தமா கம்பெனி ஆரம்பிச்ச போது, புது கதைகள் வரணும், புது நடிகர்கள், நடிகைகள் வரணும், புது இயக்குனர்கள் வரணும்னுதான் ஆரம்பிச்சோம்.

ஷார்ட் பிலிம்ஸை தியேட்டர்ல ரிலீஸ் பண்ணோம். அதுல இருந்தவங்க இப்ப பெரிய படம்லாம் பண்ணிட்டிருக்காங்க.

சினிமா தயாரிப்பு, ஷார்ட் பிலிம், டிஜிட்டல் என படங்கள் தயாரிச்சிட்டிருக்கோம். சரி, இன்டிபென்டன்ட் படம் பண்ணலாம்னு முடிவு பண்ணி அதுக்கு தனி டிவிஷன் ஆரம்பிச்சிருக்கோம்.

சணல்குமார் இரு மொழிகள்ல படம் பண்ணியிருக்கேன் பாருங்கன்னு சொன்னாரு. பார்த்தேன், இந்தப் படம் ரொம்ப பாதிச்சது. இந்த மாதிரி படங்களை தியேட்டருக்குக் கொண்டு வர நினைச்சி பண்ணியிருக்கோம். அதோட முதல் முயற்சிதான் ‘அல்லி’.

இது சக்சஸ் ஆச்சின்னா, பலருக்கு வாய்ப்பா இருக்கும்.

வெளி உலகத்தைப் பார்க்காத, சிட்டி வாழ்க்கைன்னா என்னன்னு தெரியாத ஒரு பொண்ணும், அவளைக் காதலிக்கிற பையனும் இருக்காங்க. அந்தப் பெண்ணை கூட்டிக்கிட்டு காதலன் அப்படி ஒரு நாள் வெளிய கிளம்பறான். அப்ப, அந்த பெண்ணோட விருப்பத்துக்கு எதிரா, அந்த காதலனோட முதலாளியும் அவங்க கூட கிளம்பறாரு. அப்புறம் என்ன நடக்குதுங்கறதுதான் இந்தப் படத்தோட கதை.

கதைப்படி தமிழ்நாடு, கேரளா பார்டர்ல நடக்கிற கதை. ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு டிசைன் ரொம்ப பிரமாதமா இருக்கும். மூணே மூணு கேரக்டர்தான் படத்துல, மூவருமே ரொம்ப அற்புதமா நடிச்சிருக்காங்க.

பெரிய ஹீரோக்களோட படங்களையும் மக்கள் வரவேற்பாங்க, புது முயற்சிகளையும் வரவேற்பாங்க. அப்படித்தான் நானும் வந்தேன், அதனால இந்தப் படத்தையும் வரவேற்பாங்கன்னு நம்பிக்கை இருக்கு,” என்கிறார் கார்த்திக் சுப்பராஜ்.

‘அல்லி’ படத்தை இயக்கியுள்ள சணல்குமார் சசிதரன் மலையாளத்தில் ‘ஓரால்போக்கம், ஒஷிஉடிவசத்தே களி’ ஆகிய படங்களையும், ஹிந்தியில் ‘செக்சி துர்கா’ படத்தையும் இயக்கியவர்.

Read Previous

காளிதாஸ் – விமர்சனம்

Read Next

வைபவ் நடிக்கும் ‘ஆலம்பனா’ ஆரம்பம்

Most Popular