விஜய்யை பாராட்டிய அஜித்

‘கோட்’ பாடலொன்றை பார்த்துவிட்டு, விஜய்யை அழைத்து பாராட்டியிருக்கிறார் அஜித்.

வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய், பிரசாந்த், பிரபுதேவா உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘கோட்’. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்தின் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. செப்டம்பர் 5-ம் தேதி வெளியாகவுள்ளது.

சமீபத்தில் ‘விடாமுயற்சி’ படப்பிடிப்புக்கு இடையே அஜித்தை சந்தித்துப் பேசியிருக்கிறார் இயக்குநர் வெங்கட்பிரபு. அப்போது ‘கோட்’ படம் பற்றிய தகவல்களை அஜித்திடம் பகிர்ந்துவிட்டு, பாடலொன்றையும் காட்டியிருக்கிறார். அதில் விஜய்யின் நடனத்தைப் பார்த்து சிலாகித்திருக்கிறார் அஜித்.

உடனே விஜய்க்கு தொலைபேசி மூலமாக பேசி தன்னுடைய வாழ்த்தை பகிர்ந்திருக்கிறார். மிகவும் அற்புதமாக இருந்ததாகவும், படம் வெற்றியடைய வாழ்த்துகள் எனவும் கூறியிருக்கிறார் அஜித்.

Read Previous

‘கூலி’ படப்பிடிப்பு தாமதம்: காரணம் என்ன?

Read Next

குழந்தைகளுக்கான உலகத் தரம் வாய்ந்த படம் தான் “மாம்போ” – இயக்குனர் பிரபு சாலமன்