‘கூலி’ படப்பிடிப்பு தாமதம்: காரணம் என்ன?

‘கூலி’ படப்பிடிப்பு திட்டமிடப்படி நடைபெறவில்லை. இதற்கு காரணம் என்னவென்று தெரியவந்துள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி, நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன், செளபின் ஷாகீர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘கூலி’. அனிருத் இசையமைத்து வரும் இந்தப் படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இதன் முதற்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கியது.

இதன் இரண்டாம் கட்ட படப்பிடிப்புக்காக சென்னையில் பிரம்மாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டன. ஆனால், திட்டமிட்டப்படி அங்கு படப்பிடிப்பு நடைபெறவில்லை. ஏனென்று விசாரித்தால், ரஜினியின் உடல்நிலையை காரணமாக சொல்கிறார்கள்.

பிரம்மாண்ட சண்டைக்காட்சியை படமாக்க இருந்திருக்கிறார்கள். ஆனால், ரஜினிக்கோ உடல் சோர்வு அதிகமாக இருந்ததால், ஒரு வாரம் கழித்து வைத்துக் கொள்ளலாம் என்று கூறியிருக்கிறார். இதனால் படப்பிடிப்பு ஜூலை 29-ம் தேதி தான் சென்னை அரங்குகளில் தொடங்க இருக்கிறது.

அதற்குப் பிறகு தொடர்ச்சியாக நடத்த வேண்டும் என திட்டமிட்டு இருக்கிறது படக்குழு. இதற்கு தகுந்தார் போல் ஹைதராபாத்திலும் அரங்குகள் வேலை தொடங்கியிருக்கிறது. நவம்பர் மாதத்திற்குள் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் முடிக்க வேண்டும் என கூறியிருக்கிறது சன் பிக்சர்ஸ் நிறுவனம்.

Read Previous

மீண்டும் இணைந்த சுந்தர்.சி – வடிவேலு கூட்டணி

Read Next

விஜய்யை பாராட்டிய அஜித்