பிரசாந்த் நீல் இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ளார் என்ற தகவல் வெறும் வதந்தி தான்.
மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகும் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் அஜித். லைகா நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.
இதன் படப்பிடிப்பு அசார்பைஜான் நாட்டில் நடைபெற்று வருகிறது.
இந்தப் படத்துக்குப் பிறகு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார் அஜித். அதற்குப் பிறகு இன்னும் யாருடைய படத்தையும் ஒப்புக் கொள்ளவில்லை.
இதனிடையே, பிரசாந்த் நீல் இயக்கவுள்ள படத்தில் அஜித் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
’சலார்’ படத்துக்குப் பிறகு ’சலார் 2’, ’ஜூனியர் என்.டி.ஆர் படம்’, ’கே.ஜி.எஃப் 3’ என தொடர்ச்சியாக பல்வேறு படங்களை ஒப்புக் கொண்டுள்ளார் பிரசாந்த் நீல்.
இவற்றை முடித்துவிட்டு இயக்குவார் என்றெல்லாம் தகவல் பரவியது.
இது தொடர்பாக விசாரித்த போது, அப்படி எந்தவொரு சந்திப்புமே இதுவரை நடைபெறவில்லை, அந்தச் செய்தி வெறும் வதந்தி என்று கூறுகிறார்கள்.