மீண்டும் ‘பீஸ்ட்’ படம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருக்கிறார் ஷைன் டாம் சாக்கோ.
மலையாளத்தில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஷைன் டாம் சாக்கோ. இவர் தமிழிலும் சில முன்னணி நாயகனின் படங்களில் நடித்துள்ளார்.
விஜய் நடிப்பில் வெளியான ‘பீஸ்ட்’ படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்தப் படம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை.
நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்த ‘பீஸ்ட்’ படம் இப்போதும் இணையத்தில் கிண்டல் செய்யப்பட்டு வருகிறது. ஆனால், வசூல் ரீதியாக இந்தப் படம் வெற்றி என்று தயாரிப்பு நிறுவனம் அறிவித்துவிட்டது.
இதனிடையே, இந்தப் படம் வெளியான சமயத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார் ஷைன் டாம் சாக்கோ. பின்பு அதற்கு வருத்தம் தெரிவித்தார்.
தற்போது மீண்டும் சர்ச்சைக்குரிய வகையில் பேசி சிக்கலில் மாட்டியிருக்கிறார் ஷைன் டாம் சாக்கோ. தனது படத்தின் விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சி ஒன்றில், ‘பீஸ்ட்’ குறித்த கேள்விக்கு “அந்தப் படத்தினை தயாரித்த தயாரிப்பாளருக்கே, அதன் மீது நம்பிக்கை இருந்திருக்காது” என்று பதிலளித்துள்ளார்.
இந்தப் பதிலை வைத்து விஜய் ரசிகர்கள், ஷைன் டாம் சாக்கோவை கடுமையாக இணையத்தில் விமர்சித்து வருகிறார்கள்.