பிரியாணி – விமர்சனம்

வெங்கட் பிரபு, கார்த்தி முதல் முறையாக இணையும் படம் என்ற எதிர்பார்ப்புடன் படம் பார்க்கச் சென்றால், அந்த எதிர்பார்ப்பை முழுவதுமாக நிறைவேற்றியுள்ளார்களா என்றால் இல்லையென்றுதான் சொல்ல வேண்டும். வெங்கட் பிரபு நல்ல திரைக்கதையாசிரியராக இருக்கிறார். ஆனால், நல்ல கதையாசிரியராக இல்லை. அவரே, அவர் படத்துல எங்க கதை இருக்குன்னு சொல்லி தப்பிக்கிறதுலாம் போதும் வெங்கட். உங்களை நம்பி ஒரு 30 கோடி கொடுக்கும் போது, ‘ரூம்’ போட்டு கொஞ்மாவது யோசிக்கலாமில்லை. அது என்னமோ தெரியலை, கார்த்தி கார் எடுத்து ஓட்ட ஆரம்பிச்சாலே ‘பையா’ படம்தான் ஞாபகத்துக்கு வருது. இந்த படத்துலயும் முதல் காட்சியிலேயே கார் ஓட்டிக்கிட்டேதான் அறிமுகமாகறாரு. ஒரு கார் ஷோ ரூம்ல கார்த்தியும், பிரேம்ஜியும் வேலை பார்க்கிறாங்க. ஆம்பூர்ல ஆரம்பிக்கிற அவங்களோட இன்னொரு கிளை திறப்பு விழாவுக்கு போறாங்க. விழா முடிஞ்சதும் கார்ல திரும்பி வரும் போது ‘ஃபுல்லா’ குடிச்சிட்டே வர்றாங்க. குடிச்சால் கண்டிப்பா பிரியாணி சாப்பிட்டே ஆகணும் கார்த்திக்கு. வழில ஒரு ஹோட்டல்ல காரை நிறுத்தி பிரியாணி சாப்பிடறாங்க. அப்ப, அந்த ஹோட்டலுக்கு அழகான…இல்ல இல்ல..அம்சமான மான்டி தக்கார் சாப்பிட வர்றாங்க. அவங்க அம்சத்துல மயங்கற கார்த்தி, மான்டி தக்காரை ஃபாலோ பண்றாரு. வழியில மான்டியோட கார் ரிப்பேராகி நிற்க, அவங்கள ஹோட்டல் வரைக்கும் டிராப் பண்றாரு. ஆனால் மான்டி,  கார்த்தியையும் பிரேம்ஜியையும் பார்ட்டிக்கு கூப்பிட ரெண்டு பேரும் போய் செமையா குடிக்கிறாங்க. விடிஞ்சி பார்த்தால், கார்த்தி மட்டும் தனியா ஒரு ரோட்ல இருக்கிறாரு.  திரும்பவும் அந்த ஹோட்டலுக்குப் போய்ப் பார்த்தால் அங்க பிரேம்ஜி போதையில தூங்கிட்டிருக்கிறாரு. அவரை எழுப்பும் போது போலீஸ் அவங்களை ரவுன்ட் அப் பண்றாங்க. அங்க இருந்து தப்பிச்சி வந்து பார்த்தால் அவங்க கார் டிக்கில பிரபல தொழிலதிபர் நாசர் இறந்து கிடக்கிறாரு. என்ன நடந்ததுன்னு யோசிச்சிப் பார்த்தால் இரண்டு பேருக்குமே எதுவுமே ஞாபகத்துக்கு வரலை. அது மட்டுமில்லாம கார்த்தியும், பிரேம்ஜியும்தான் கொலை பண்ணாங்கன்னு ஊரெல்லாம் பேசப்படுது. இந்த ‘ மர்ம வலை’ல இருந்து கார்த்தியும், பிரேம்ஜியும் எப்படி தப்பிக்கிறாங்கன்றதுதான் படத்தோட மீதி கதை. ஒரு ஜாலிப் பேர்வழியாக கார்த்தி. ‘பையா’ படத்து கேரக்டரை அடிக்கடி ஞாபகப்படுத்தறாரு கார்த்தி. ‘கான்டாக்ட் லென்ஸ்’ மட்டும் ஒரு கேரக்டரை மாத்திடுமா என்ன. இடைவேளைக்குப்புறம் பரபரப்பான ஆக்ஷனா மாற வேண்டிய படம் என்னமோ தடுமாற்றத்தோடவே நகர்றதால கார்த்திய முழு ஆக்ஷன் ஹீரோவா பார்க்க முடியாம போயிடுது. இந்த மாதிரியான கதைலலாம் கார்த்தி நடிக்க வேண்டிய அவசியமேயில்லை. நமக்கென்னமோ கார்த்திக்கு ‘பருத்தி வீரன்’ படத்துக்கப்புறம் சரியான தீனி போடற டைரக்டர் கிடைக்கலன்னுதான் தோணுது. அழகு மயில் ஹன்சிகாதான் படத்தோட ஹீரோயின்னு கற்பூரம் அடிச்சி சத்தியம் பண்ணணும் போல. ரெண்டு பாட்டுக்கு மட்டும் டான்ஸ் ஆடறாங்க. கார்த்தியோட மருந்துக்குக் கூட காதல் காட்சிலாம் இல்லை. ஏன் எப்பவும் ஒரே மாதிரியான டிரஸ்ஸோடவே வலம் வர்றாங்கன்னு தெரியலை. நடிச்ச படங்களோட லிஸ்ட்ல வேணா ஹன்சிகா இந்த படத்தை சேர்த்துக்கலாம். படத்தோட காமெடியன்னு யாராவது பிரேம்ஜியை சொன்னால் அவ்வளவுதான். காமெடி பண்ணாதானன்னு கேக்கறீங்களா அதுவும் சரிதான். அவர் படத்தோட இரண்டாவது ஹீரோ. கார்த்தி அசந்தால் ஹன்சிகாவையே கரெக்ட் பண்ண பார்க்கிறாரு. வெங்கட் பிரபு  இனியும் அவரோட படங்கள்ல பிரேம்ஜிக்கு முக்கியத்துவம் கொடுத்தால் மத்த ஹீரோக்களும் யோசிக்க ஆரம்பிச்சிடுவாங்க. மான்டி தக்கார், எதுக்காக இவங்களை அந்த கேரக்டர்ல நடிக்கக் கூப்பிட்டாங்களோ அதை கரெக்டா செஞ்சிருக்காங்க. பஞ்சாபி படங்கள்ல குடும்ப குத்துவிளக்கா நடிச்சவங்களாம் இவங்க. நம்பவா முடியுது…ம்ம்ம்ம்… ராம்கிக்கு இந்த படத்தை ரீ என்ட்ரின்னுலாம் சொல்ல முடியாது. மற்ற நடிகர்கள் லிஸ்ட்ல நாசர், ஜெயப்பிரகாஷ், மதுமிதா, சுப்பு பஞ்சு, ஷண்முக சுந்தரம், நிதின் சத்யா, உமா ரியாஸ் இவங்கள்லாம் இருக்காங்க. யுவனின் பின்னணி இசை வழக்கம் போல அருமை. ஆனால், பாடல்களில் நிறையவே ஏமாற்றிவிட்டார். என்ன ஆச்சு யுவன் ? இடைவேளைக்கு பின்னர்தான் படம் விறுவிறுப்பாக ரசிக்க வைக்கிறது. இடைவேளை வரை கலகப்பான காட்சிகளை வைக்கத் தவறி விட்டார்கள். ‘பிரியாணி’ – குஸ்கா…

Read Previous

இன்றைய ரிலீஸ்…

Read Next

என்றென்றும் புன்னகை – விமர்சனம்