‘விந்தை’ – காவல் நிலையத்தில் காதல் ஜோடி

அன்னை புதுமை மாதா பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பாக R.L.யேசுதாஸ் R.Y.ஆல்வின், R.Y.கெவின் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படம் ‘விந்தை’.

மகேந்திரன் நாயகனாகவும், மனிஷாஜித் நாயகியாகவும் நடிக்கிறார்கள். இந்தப் படத்தை லாரா இயக்ககிறார். இவர் இதற்கு முன் ‘வர்மம்’ படத்தை இயக்கியவர்.

படம் பற்றி இயக்குனர் கூறியதாவது,

மனித வாழ்க்கையில் தொலைந்து போன ஒரு விஷயத்தை தேடிப் போகிற இடமாக காவல் நிலையம் இருக்கிறது. அப்படி இருக்கும் காவல் நிலையத்தை அனைவரும் ஒரு வித வெறுப்புடனும், அறுவெறுப்புபுடனும்தான் பார்ப்பார்கள்.

அந்த இடத்திற்கு சென்றுவிட்டால் நாம் அனைவரும் சிரிப்பை மறந்துவிடுவோம். ஆனால் ஊரில் இருந்து ஓடி வந்த நாயகன், நாயகி இருவரும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள். இரவு 1 மணி முதல் மறுநாள் இரவு 1 மணிவரை அவர்கள் அங்கு சந்திக்கும் நிகழ்வுகள் தான் இந்த படத்தின் கதை.

படம் வெளியான பிறகு ரசிகர்கள் இது போன்று ஒரு காவல் நிலையம் நம்ம ஊரில் இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைப்பார்கள். அந்த அளவிற்கு படத்தை முழுக்க முழுக்க காமெடியாக உருவாக்கி இருக்கிறோம்.

ஒரு சில காட்சிகளைத் தவிர மற்ற அனைத்து காட்சிகளும் காவல் நிலையத்திலேயே படமாக்கியுள்ளோம். படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்து விட்டது, விரைவில் வெளியிட உள்ளோம்,” என்கிறார் இயக்குனர்.

 

Read Previous

தெலுங்கில் மே 1ல் ‘காஞ்சனா 2’ வெளியீடு

Read Next

விழுந்து, அடிபட்டு, அழுது நடித்த பிரியங்கா