தஞ்சை மண் மணத்துடன் ‘சண்டி வீரன்’…

இயக்குனர் பாலாவின் தயாரிப்பில் சற்குணம் இயக்கத்தில் அதர்வா, ‘கயல்’ ஆனந்தி, லால் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள ‘சண்டி வீரன்’ படத்தின் இசை வெளியீடு நேற்று சென்னையில் நடைபெற்றது.

பிரபல பைனான்சியரும், தயாரிப்பாளரும், வினியோகஸ்தருமான அன்புசெழியன் இசையை வெளியிட படத்தின் தயாரிப்பாளர் பாலா உள்ளிட்ட படக்குழுவினர் பெற்றுக் கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் சற்குணம், “படத்தின் கதை என்ன என்பது கொஞ்சம் சஸ்பென்ஸ். நிச்சயம் இந்தப் படம் ஒரு யதார்த்தமான வாழ்க்கைப் பதிவாக இருக்கும்,” என்றார்.

நிகழ்ச்சியில் பேசிய அதர்வா கதாநாயகி ஆனந்தியை குழந்தை என்றார். அவரைப் பற்றி அதர்வா பேசும் போது அவருடைய முகத்தில் அப்படி ஒரு சிரிப்பு.

“இந்தக் கதை பாலா சாரை மிகவும் கவர்ந்த ஒரு கதை. அவர் சொன்னதால் அவர் மீது நம்பிக்கை வைத்து இந்தப் படத்தில் நடிக்க சம்மதித்தேன். என்ன கதை, என்ன கதாபாத்திரம் என்று எனக்கு அப்போது தெரியாது. ஒரு வாரம் கழித்துதான் இயக்குனர் கதையைச் சொன்னார்.

இப்படி ஒரு கிராமத்துக் கதையில் நடிக்கும் வாய்ப்பிற்காக நீண்ட நாட்கள் காத்திருந்தேன். நிச்சயம் இந்தப் படம் அனைவரையும் கவரும்,” என்றார்.

வழக்கம் போல படத்தின் தயாரிப்பாளரான இயக்குனர் பாலா, படக்குழுவினருக்கு வாழ்த்துகள் என்று ஒற்றை வரியில் பேசிவிட்டு அமர்ந்தார்.

தஞ்சை மாவட்டப் பின்னணியில் உருவாகிய்ளள இந்தப் படம், இந்த மாதக் கடைசியில் அல்லது ஜுலை முதல் வாரத்தில் இந்தப் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read Previous

காக்கா முட்டை – விமர்சனம்

Read Next

Chandi Veeran – Official Teaser

Most Popular