மீண்டும் உதயநிதி – ஹன்சிகா ஜோடி…

உதயநிதி ஸ்டாலின் தற்போது ‘மான் கராத்தே’ திருக்குமரன் இயக்கத்தில் ‘கெத்து’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக எமி ஜாக்சன் நடித்து வருகிறார்.

இந்தப் படத்தையடுத்து உதயநிதி, ‘என்றென்றும் புன்னகை’ படத்தை இயக்கிய அகமது இயக்கத்தில் ‘ஜாலி எல்எல்பி’ படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க உள்ளார். இந்தப் படத்தில் உதயநிதி ஜோடியாக ஹன்சிகா நடிக்க உள்ளார். மேலும் பிரகாஷ்ராஜ், ராதாரவி முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளதாகவும் உதயநிதி தெரிவித்துள்ளார்.

உதயநிதி நாயகனாக அறிமுகமான ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்தில் அவர் ஜோடியாக ஹன்சிகாதான் நடித்திருந்தார். அந்தப் படத்தில் இருவருடைய ஜோடிப் பொருத்தமும் சிறப்பாக அமைந்திருந்தது, படமும் வெற்றிப் படமாக அமைந்தது.

அந்த வெற்றிக் கூட்டணி மீண்டும் அமைந்தால் நன்றாக இருக்கும் என்ற எண்ணத்தில் இணைந்துள்ளார்களாம்.

Read Previous

No tax exemption for Papanasam ?

Read Next

காலத்தே செய்த நல்ல செயல் – கமல்ஹாசனின் நன்றி உரை