எஸ்.ஜே. சூர்யா பாராட்டிய ‘சவாலே சமாளி’ பாடல்…

நடிகர் அருண்பாண்டியன் வழங்கும் A & P குரூப்ஸ் பட நிறுவனம் சார்பாக கவிதாபாண்டியன், S.N. ராஜராஜன் தயாரிக்கும் படம் ‘சவாலே சமாளி’.

சத்ய சிவா இயக்கும் இந்தப் படத்தில் அசோக்செல்வன் கதாநாயகனாக நடிக்கிறார். பிந்துமாதவி கதாநாயகியாக நடிக்கிறார்.

“பக்கா கமர்ஷியல் படம் சவாலே சமாளி. ஒவ்வொரு நடிகர், நடிகையுமே கேரக்டராகவே மாறி காமெடியில் தூள் கிளப்பி இருக்கிறார்கள்.

இந்தப் படத்திற்காகப் பதிவு செய்த பாடலான

நல்லவனா கெட்டவனா ஆம்பள…
தெரியாமத் தான் தவிக்கிறாடா பொம்பள…

என்ற பாடலைக் கேட்ட எஸ்.ஜே.சூர்யா இந்தப் பாடலின் படப்பிடிப்பு எப்போது, எங்கே நடந்தாலும் சொல்லுங்க நான் வந்து பார்க்கணும் என்றார்.

அசோக் செல்வன் – ஜெகன் – ஐஸ்வர்யா நடித்த அந்த பாடல் மகாபலிபுரம் அருகே படமாக்கப்பட்ட போது எஸ்.ஜே.சூர்யா வந்திருந்து படப்பிடிப்பைப் பார்த்து பாடலையும், படமாக்கப்பட்ட விதத்தையும் பாராட்டிச் சென்றார்.

நடிகை லட்சுமிமி மகள் ஐஸ்வர்யா முதன் முதலாக ஒரு பாட்டுக்கு மட்டும் நடனம் ஆடி இருக்கிறார்.

செப்டம்பர் மாதம் 4 ம் தேதி உலகமெங்கும் படம் வெளியாகிறது,” என்றார் இயக்குனர் சத்யசிவா

Read Previous

‘Srimanthudu’ grossing Rs.101.25 crore worldwide in its first week

Read Next

Vaalu – Review