எழுத்து, இயக்கம் – வி.எஸ்.பிரபா இசை – எம்.எஸ்.ராம் ஒளிப்பதிவு – வி.பி.சிவானந்தம் படத் தொகுப்பு – எஸ். யுரேஷ் குமார் தயாரிப்பு – மாருதி டி. பாலகிருஷ்ணன் கதைச் சுருக்கம் மகேந்திரனுக்கு சினிமாவில் இயக்குனராக வேண்டும் என்பது ஆசை. அவருடைய நண்பன் திலீப் ரோஜருக்கு இசையமைப்பாளராக வேண்டும் என்பது ஆசை. திலீப் ரோஜர், ஸ்ருதி ராமகிருஷ்ணனைன் காதலிக்க ஆரம்பிக்கிறார். தனியார் மார்க்கெட்டிங் நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஸ்ருதி, ஒரு நாள் தன் அலுவலக வேலை விஷயமாக ஒரு பணக்காரன் வீட்டிற்குச் செல்கிறார். அங்கு நடக்கும் ஒரு சம்பவத்தால் மாட்டிக் கொள்கிறார். அவளைக் காப்பாற்ற மகேந்திரனும், திலீப் ரோஜரும் செல்கின்றனர். சினிமாவில் கஷ்டப்பட்ட மகேந்திரனுக்கும், திலீப்புக்கும் மறுநாள் தான் அவர்களது புதுப் படத்தின் பூஜை. இந்த சூழ்நிலையில் ஸ்ருதியைக் காப்பாற்றச் சென்ற இடத்தில் அந்தப் பணக்காரர் கொல்லப்படுகிறார். அதன் பின் என்ன நடந்தது என்பதுதான் படத்தின் மீதிக் கதை. விமர்சனக் காட்சிகள் அது என்ன சென்டிமென்ட்டோ, சினிமாவுக்குள் சினிமாவைக் கதைக் களமாக வைக்கும் எந்தப் படங்களும் பெரிய வெற்றியைப் பெற முடிவதில்லை. அந்த வரிசையில் இந்தப் படமும் இடம் பெறும். பொறுமையைச் சோதிக்கும்படியான காட்சிகளை வைத்திருக்கிறார் இயக்குனர். சுவாரசியமான காட்சிகள் இல்லாதது படத்தில் மிகப் பெரிய குறை. நகைச்சுவை என்ற பெயரில் ஜெய்சங்கரின் வாரிசு சஞ்சய் சங்கர் கடுப்பேற்றுகிறார். விரைவில் இசை என்று பெயரை வைத்துவிட்டு ஒரு பாடல் கூட கேட்கும்படி இல்லை.