அஜித் நடித்துள்ள ‘வேதாளம்’ திரைப்படம் தீபாவளியன்று உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.
அவரது ரசிகர்கள் படத்தை மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில் இன்று அதிகாலை திருப்பதியில் சுப்ரபாத தரிசனத்தில் அஜித் சாமி கும்பிட்டுள்ளார். காலையிலேயே அதன் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வலம் வர ஆரம்பித்தன. அதன் பின் வீடியோக்களும் வெளிவந்தன.
வீடியோவில் அஜித் சாமி கும்பி கோயிலுக்குள் நுழைந்தது, வெளிவந்தது, பின்னர் சிலருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டது ஆகியவை இடம் பெற்றுள்ளன. அதோடு, புகைப்படம் எடுப்பதற்காக அஜித் நின்ற போது பின்னாலிருந்த ஒரு பெண்மணிக்கு ஒதுங்கி வழி விட்டு அவரைப் போக கை காட்டியது அஜித் ரசிகர்களிடம் பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
அஜித் நடக்க முடியாமல் தாங்கித் தாங்கி நடந்து கோயிலைச் சுற்றியுள்ளார். இன்னும் இரண்டு வாரங்களில் அஜித்துக்கு காலில் ஆபரேஷன் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
திருப்பதியில் அஜித் – வீடியோ
நன்றி – Bingoo Box
https://youtu.be/APbGB5o3iBg