கமல்ஹாசனிடம் அஜித்தைப் பற்றி ஸ்ருதிஹாசன் சொன்னது என்ன ?

தீபாவளித் திருநாளான நாளை கமல்ஹாசன் நடித்துள்ள ‘தூங்காவனம்’ படமும், கமல்ஹாசனின் மகளான ஸ்ருதிஹாசன், அஜித் ஜோடியாக முதல் முறையாக நடித்துள்ள ‘வேதாளம்’ படமும் வெளியாகின்றன.

ஸ்ருதிஹாசன் எந்தப் படத்தில் நடித்தாலும் அந்தப் படம் பற்றியும், அவருடன் நடித்துள்ள ஹீரோக்கள் பற்றியும் அப்பா கமல்ஹாசனிடம் சொல்வாராம். அப்படி அஜித்தைப் பற்றியும் கமல்ஹாசனிடம் சொல்லியிருக்கிறார்.

இது பற்றிய விவரத்தை கமல்ஹாசன் விஜய் டிவியில் நாளை ஒளிபரப்பாக உள்ள காஃபி வித் டிடி சிறப்பு நிகழ்ச்சியில் பகர்ந்துள்ளார்.

“நான் நடித்த படமும் ஸ்ருதிஹாசன் நடித்த படமும் நாளை ஒன்றாக வெளிவருவது மோதல் அல்ல, அதுவும் ஒரு கூட்டணிதான் என்று சொல்வேன்.

ஒவ்வொரு படம் முடிஞ்சி வரும் போதும் சில நடிகர்களைப் பத்தி நல்லாவும் சொல்வாங்க, பயமா இருக்குன்னும் சொல்வாங்க. அஜித்தைப் பத்தி சொல்லும் போது ரொம்ப பெருமையாவும், ரொம்ப ஜென்டில்மேன் அவருன்னும் சொன்னாங்க,” என ஸ்ருதிஹாசன், அஜித்தைப் பற்றி தன்னிடம் சொன்னதாகச் சொல்லியுள்ளார்.

ஆக, கமல் ரசிகர்களே, அஜித் ரசிகர்களே நாளை ‘தூங்காவனம்’ படமும், ‘வேதாளம்’ படம் மோதிக் கொள்ளவில்லை. கூட்டணி போட்டு வெளிவருகின்றன என்பதை
ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.

 

Read Previous

சன் டிவி – தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள்

Read Next

Kamal is a class apart, says Director Rajesh

Most Popular