தத்தெடுப்பு – மணிரத்னத்தின் மணியான முயற்சி

தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு தன்னார்வ நிறுவனங்கள் உதவி செய்து வருகின்றன.

இப்படி ஒரு எதிர்பாராத பேரிடரால் மக்கள் பாதித்துள்ள நிலையில் ஒரு இடத்திலேயே பெரும்பாலான உதவிகளும் குவிந்துவிடாதபடி ஒவ்வொரு குறிப்பிட்ட பகுதியையும் தன்னார்வ நிறுவனங்கள் தனித்தனியாக தத்தெடுத்து உதவி செய்வது சிறப்பாக இருக்கும்.

அப்படி ஒரு மணியான முயற்சியை திரைப்பட இயக்குனரான மணிரத்னம் மற்றும் சுஹாசினி மணிரத்னம் அவர்களின் நாம் இயக்கத்தின்  மேற்கொண்டுள்ளனர்.

சென்னை, கோட்டூர்புரம் பகுதியிலுள்ள சூர்யா நகரை அவர் தத்தெடுத்துள்ளார். அந்த நகரை தத்தெடுத்த பின் முதல் கட்டமாக அப்பகுதி மக்களுக்கு வெள்ள நிவாரண பொருட்களை இயக்குனர் மணிரத்னம் மற்றும் சுஹாசினி மணிரத்னம் தலைமையிலான நாம் குழுவினர் வழங்கினர்.

மேலும் மருத்துவ உதவிகள், கலந்தாய்வுகள் உட்பட பல உதவிகளை தொடர்ந்து செய்யவுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதை மற்றவர்களும் பின்பற்றலாமே….

Read Previous

‘தமிழ் மகன்’தான் ‘தங்க மகன்’ – தனுஷ்

Read Next

‘பீப் சாங்’ என் பாட்டே இல்லை – அனிருத் அலறல்