இசையமைப்பாளர் அனிருத்துடன் இணைந்து நடிகர் சிம்பு உருவாக்கிய ஆபாசப் பாடலான ‘பீப் சாங்’ பாடலுக்கு பெண்களிடமும், மக்களிடமும் கடும் எதிர்ப்பு ஏற்பட்டது.
கோவை மாநகரத்தில் உள்ள மாதர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் கோவை ஆணையரிடம் இது குறித்து புகார் அளித்தனர். அதன் படி சென்னை வந்த கோவை போலீசார் சிம்புவுக்கும், அனிருத்துக்கும் சம்மன் வழங்கியுள்ளனர்.
அதில் வரும் 19ம் தேதி கோவை ஆணையர் முன் ஆஜராகும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே இந்தப் பாடலுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை என அனிருத்தும், அனிருத் தான் பாடலுக்கு இசையமைத்தார் என்று சிம்பு தரப்பும் தெரிவித்துள்ளார்கள்.
இது அடுத்து ஒரு புதிய சர்ச்சையை உருவாக்கியுள்ளது.